சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது.. ஹிந்தி "தேசிய" மொழியா.. இல்லவே இல்லை.. தமிழ்தாங்க தேசிய மொழி.. இதை படிங்க முதல்ல!

தமிழ்தான் நம்முடைய தேசிய மொழியாகும்

Google Oneindia Tamil News

சென்னை: உண்மையில் இந்தியை பீட் செய்து விட்டது தமிழ். முன்பெல்லாம் தேசியத் தலைவர்கள் என்றால் இந்தியைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் கண்டிப்பாக தேவை என்ற நிலை இப்போது நிலைமை மாறி விட்டது.

இந்தி பேசும் இந்தித் தலைவர்களை இப்போது தமிழ் பேச வைத்து வருகிறது தமிழ்நாடு. அந்த வகையில் இந்தி தேசிய மொழி என்று இனியும் கூற முடியாது. தமிழைத்தான் பல தேசியத் தலைவர்களும் சரளமாக பேச ஆரம்பித்து வருகின்றனர். எனவே தமிழ்தான் உண்மையான தேசிய மொழியாக மாறி நிற்கிறது.

உதாரணத்திற்கு நம் பிரதமர் மோடியை எடுத்துக் கொள்வோம். டோட்டலாக "தமிழ்த் தாத்தா"வாக அவர் மாறி வருகிறார். சீன அதிபருடன் மகாபலிபுரத்தில் அவர் வேட்டி சட்டை போட்டு ஜம்மென்று வந்து நின்ற அந்தக் காட்சியை யாரும் இன்னும் மறக்கவில்லை. கெட்டப் மட்டுமல்ல.. பேச்சிலும் தமிழ் புகுந்து விளையாடுகிறது மோடிக்கு.

 திருக்குறள்

திருக்குறள்

பல காலமாகவே அவர் தமிழை கொஞ்சம் கொஞ்சமாக பேசி வருகிறார். ஏன் திருக்குறளை கூட சூப்பராக சொல்கிறார். இது உண்மையிலேயே பாராட்ட வேண்டியது.. வெகுவாக கை குலுக்கப்பட வேண்டியது. டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அவர் தமிழில் பேச வேண்டிய கட்டாயமில்லை. ஆனாலும் அவர் மறக்காமல் அவ்வப்போது தமிழை கையில் எடுக்கிறார்.

 பாஜக

பாஜக

அமெரிக்காவுக்கு போனாலும் தமிழைத் தொடுகிறார். நாடாளுமன்றத்திலும் பேசுகிறார். வடக்கே ஏதாவது நிகழ்ச்சி என்றாலும் தமிழைத் தொட்டுச் செல்கிறார். இதெல்லாம் பெரிய புரட்சி போன்ர செயலாகும் அதை மறுக்கவே முடியாது. அதே போலத்தான் பல வட நாட்டு பாஜக தலைவர்களும் கூட தமிழை கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

 பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

பிரதமர் மோடி தமிழை கையாளும் விதம் பல நேரங்களிலும் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்து பலரும் இப்போது தமிழுக்கு மாறி வருகின்றனர். ராகுல் காந்தி கூட தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் பாராட்டி பேச ஆரம்பித்து விட்டார். அது மட்டுமா இதோ இப்போது அவரது தாயாரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியும் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறாராம். விரைவில் அவர் தமிழில் பேசப் போவதாக சொல்கிறார்கள்.

 கிரிக்கெட்

கிரிக்கெட்

இது மட்டுமல்ல.. இந்திய கிரிக்கெட் அணியிலும் கூட தமிழைத் தாய் மொழியாக கொள்ளாத பலரும் நன்றாகவே தமிழ் பேசுகின்றனர். இதுதான் ஆச்சரியமானது... இப்ப சொல்லுங்க, இந்தி தேசிய மொழியா அல்லது தமிழா.. எல்லாம் தேர்தல் முடியும் வரைதானா அல்லது இனிமே எல்லாமே இப்படித்தானா.. அது தெரியலை.. பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

English summary
Our Tamil is the national language, not Hindi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X