சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு.. வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு.. ஏப்ரல் 6இல் பதிவானதைவிட மிக குறைவு

Google Oneindia Tamil News

சென்னை: வேளச்சேரி இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 92வது வாக்குச்சாவடியில் மொத்தம் 548 வாக்குகள் உள்ள நிலையில், அவற்றில் 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது வேளச்சேரி தொகுதியில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Out of 548 votes only 186 votes recorded in Velachery re-election

இதையடுத்து வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் மட்டும் மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று காலை டி.ஏ.வி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

காலையில் இருந்தே அவ்வப்போது வேளச்சேரி வேட்பாளர்களும் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தை பார்வையிட்டுவந்தனர். காலை முதலே அங்கு மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி 92 வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு - விறுவிறுப்பாக வந்த வாக்காளர்கள்வேளச்சேரி 92 வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு - விறுவிறுப்பாக வந்த வாக்காளர்கள்

முன்னதாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் இதே வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதைவிட ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். அங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 548 ஆகும்.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது,

English summary
velachery re-election latest update, only 186 votes recorded
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X