சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் பாணியில் தமிழகத்திலும் நுழைவாரா ஓவைசி.. ஓட்டு வங்கியைக் காக்க.. உஷாராகும் திமுக கூட்டணி!

Google Oneindia Tamil News

சென்னை: வட இந்தியாவில் சோ கால்ட் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்துக்கும் பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கிறது ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி. பீகார் தேர்தலில் தலைகீழ் மாற்றத்துக்கு காரணமாக இருந்த ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தமிழ்நாடு சட்டசபை தேர்தலிலும் களம் இறங்குமா? திமுக கூட்டணி கட்சிகள் இதை எப்படி எதிர்கொள்ளக் கூடும் என்பதும் விவாதமாகி உள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரை மையமாக கொண்ட ஒரு சின்னஞ்சிறிய உள்ளூர் கட்சியாகத்தான் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மஜ்லிஸ் களமாடிய போது தேர்தல் வெற்றி தோல்விகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன.

உதாரணமாக மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி வெறும் 1.34% வாக்குகள்தான் பெற்றது. அதேபோல தலித்துகள் கட்சியான விபிஏ 4.6% வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகளானது சோ கால்ட் மதச்சார்பற்ற சக்திகள் போட்டியிட்ட 35 தொகுதிகளில் முஸ்லிம்கள், தலித்துகள் வாக்குகளை தன்வசமாக்கியது. 27 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயித்த வாக்கு வித்தியாசங்களை விட கூடுதல் வாக்குகளைப் பெற்றன.

பீகாரில் ஓவைசி

பீகாரில் ஓவைசி

இதையேதான் பீகாரிலும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி செய்து காட்டி இருக்கிறது. பீகார் தேர்தல் களத்தில் ஓவைசி முன்வைத்த மிக முக்கியமான விமர்சனம், ஆர்ஜேடி போன்ற கட்சிகள் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. போன்ற இஸ்லாமியர்களை பாதிக்கும் விவகாரங்களில் மவுனத்தை கடைபிடித்தன என்பதுதான். வாக்கு வங்கியாக மட்டும் முஸ்லிம்கள் இருக்கட்டும்; அவர்களது பிரச்சனைகளை பற்றி கவலை எதுவுமே இல்லை என்கிற சோ கால்ட் மதச்சார்பற்ற கட்சிகளின் அலட்சியப் போக்குக்கு ஆப்பு வைத்து வருகிறது மஜ்லிஸ் கட்சி.

 மே.வ. தேர்தலில் ஓவைசி

மே.வ. தேர்தலில் ஓவைசி

இதனால் வட இந்தியாவின் மதச்சார்பற்ற சக்திகள் என்கிற கட்சிகள் எல்லாம் பீதியில் உறைந்து போயிருக்கிறது. அடுத்து மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறது மஜ்லிஸ் கட்சி. முஸ்லிம்களின் வாக்குகளை நம்பித்தான் இடதுசாரிகளும் காங்கிரஸும் அங்கே பெரும் நம்பிக்கையோடு இருக்கின்றன. இதற்கு வேட்டு வைக்க போகிறது மஜ்லிஸ் கட்சி. இதற்காகவே பாஜகவின் பி டீம்தான் ஓவைசி கட்சி என்றெல்லாம் இப்போதே விமர்சன பாட்டை பாட ஆரம்பித்திருக்கின்றன சோ கால்ட் மதச்சார்பற்ற கட்சிகள்.

வட இந்திய கட்சிகள்

வட இந்திய கட்சிகள்

ஆனாலும் மிக நீண்ட காலங்களுக்குப் பின்னர் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு சக்தியாக மஜ்லிஸ் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. வலதுசாரி வகுப்புவாதம் ஆட்சி அதிகாரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆதரவாக உற்றதுணையாக இருக்க வேண்டிய நட்பு சக்திகள், வாக்கு அரசியல் விளையாட்டுக்கான பொம்மை பொருளாக முஸ்லிம்களை அணுகியதன் விளைவாகத்தான் மஜ்லிஸ் கட்சியிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றன. வட இந்தியாவில் இந்த வேட்டையை நிகழ்த்தி வரும் ஓவைசி தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார்? என்கிற கேள்வி எழாமல் இல்லை.

வட இந்திய கட்சிகள்

வட இந்திய கட்சிகள்

ஆனாலும் மிக நீண்ட காலங்களுக்குப் பின்னர் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு சக்தியாக மஜ்லிஸ் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. வலதுசாரி வகுப்புவாதம் ஆட்சி அதிகாரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆதரவாக உற்றதுணையாக இருக்க வேண்டிய நட்பு சக்திகள், வாக்கு அரசியல் விளையாட்டுக்கான பொம்மை பொருளாக முஸ்லிம்களை அணுகியதன் விளைவாகத்தான் மஜ்லிஸ் கட்சியிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றன. வட இந்தியாவில் இந்த வேட்டையை நிகழ்த்தி வரும் ஓவைசி தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார்? என்கிற கேள்வி எழாமல் இல்லை.

தமிழ்நாட்டில் ஓவைசி போட்டி?

தமிழ்நாட்டில் ஓவைசி போட்டி?

தமிழகத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திலும் பெரும் கனவுடன் திமுக கூட்டணியில் இடதுசாரிகளும் காங்கிரஸும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக அணிக்குதான் முஸ்லிம்கள் அப்படியே வாக்களிப்பார்கள் என்பதெல்லாம் கிடையாது. அதிமுக அணிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக திக்கி திணறித்தான் ஜெயிக்க முடிந்தது நிகழ்கால வரலாறு.

நேரடியாக போட்டியிடுமா?

நேரடியாக போட்டியிடுமா?

ஆகையால் மஜ்லிஸ் கட்சி நேரடியாக தமிழக சட்டசபை தேர்தல் களங்குமா? அல்லது வேறு ஒரு முஸ்லிம் கட்சியுடன் கைகோர்த்து களம் இறங்குமா? என்பதில் தெளிவு இல்லைதான். இருந்தபோதும் ஓவைசியின் அதிரிபுதிரி ஆட்டங்களுக்கு ஈடுகொடுத்தாக வேண்டிய உஷார் நிலையில் இருக்கின்றன திமுக கூட்டணி கட்சிகள்.

English summary
Owaisi's AIMIM may contest in TN Assembly Election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X