சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிரி, சிரிச்சுட்டே இரு.. உம்முன்னு இருக்காதே.. மகனுக்கு ப.சிதம்பரம் கொடுத்த செம டிப்ஸ்

மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ப. சிதம்பரம் டிப்ஸ் ஒன்று தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டி- வீடியோ

    சென்னை: "மகனே.. சிரிச்சிட்டே இரு.. ஜனங்கள பாத்தால் சிரி.. கேமராவை பார்த்தால் சிரி.. முகத்தை உம்முன்னு மட்டும் வெச்சுக்காதே" என்று ப.சிதம்பரம் கார்த்தி சிதம்பரத்துக்கு டிப்ஸ் கொடுத்தாராம்!

    மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவகங்கை தொகுதியில் மட்டும் வேட்பாளரை அறிவிக்க முடியாத அளவுக்கு நிலைமை சென்றது.. அந்த அளவுக்கு காங்கிரசில் பலம் வாய்ந்தவர் ப.சிதம்பரம்!

    அகில இந்திய தலைமைக்கே மண்டை காய்ந்து.. கடைசியில் கார்த்தி சிதம்பரம்தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது!

    ஏன் துரைமுருகன் வீட்டில் மட்டும்?.. சீமான் சொன்னது சரிதான்.. பாரபட்சத்தை விலக்குமா தேர்தல் ஆணையம் ஏன் துரைமுருகன் வீட்டில் மட்டும்?.. சீமான் சொன்னது சரிதான்.. பாரபட்சத்தை விலக்குமா தேர்தல் ஆணையம்

    வேட்பாளர்

    வேட்பாளர்

    எனினும் எச்.ராஜா முதல் சுதர்சன நாச்சியப்பன் வரை விமர்சனங்களை அள்ளி தெளித்தாலும், அதற்கு கார்த்தி சிதம்பரம் சொன்ன பதில், "என் மேல கேஸ் இருக்கு.. ஆனா அது எதுவும் நிரூபிக்கப்படலையே" என்பதுதான்! இந்த நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்தார். அவரிடம் வாரிசு அரசியல் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

    வாரிசு அரசியல்

    வாரிசு அரசியல்

    அதற்கு, "வாரிசு அரசியல் என்பதெல்லாம் இப்போது எடுபடாத பேச்சு. இதுதொடர்பாக அரசியல் சட்டம் கொண்டு வரட்டும். ஒரு குடும்பத்தில் யாரேனும் அரசியலில் இருந்தால் வேறு யாரும் வரக் கூடாது என்று சட்டம் போடட்டும். நான் ஏற்கத் தயார்" என்றார்.

    ஒரே டிப்ஸ்

    ஒரே டிப்ஸ்

    அதேபோல, தனது தந்தையை பற்றி கார்த்தி சிதம்பரம் சொல்லும்போது, "எப்பவும் சிரிச்சுட்டே இரு. சிரிக்காம இருக்காதே. கேமராவைப் பார்த்தாலே சிரி. முகத்தை உம்மென்று வெச்சுக்காதே.. இதுதான் எனக்கு அப்பா கொடுத்த ஒரே டிப்ஸ்" என்றார்.

    மக்கள் நம் பக்கம்

    மக்கள் நம் பக்கம்

    உடனே அந்த செய்தியாளர்.. வியப்புடன் "ஏன் இப்படி" என்று கேட்டார். அதற்கு கார்த்தி, "மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். அதனால சந்தோஷமாக இரு, சிரித்த முகத்துடன் இரு. சிரித்த முகத்துடனேயே எப்பவும் மக்களை சந்தி என்பார்.. அதற்காகத்தான்" என்றார்.

    English summary
    Karthi Chidamabram is going to compete in Sivagangai Constitution. For that P Chidambaram advised him to be laughing whenever people meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X