சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாளில் 4,000 பேர் கொரோனாவால் மரணம்... ஆள்வோர் ஈரமில்லாத கல் நெஞ்சக்காரர்கள்- ப. சிதம்பரம் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் ஒருநாளில் 4,000 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளது பெருந்துயரம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. ஆனால் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,000-த்தை தாண்டியிருக்கிறது.

P Chidambaram accuses Centre for 4,000 Corona deaths in a Single day

இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் (குறள்: 442)

நாளொன்றுக்கு 4000 பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழக்கிறார்கள என்று அரசு சொல்கிறது.

அப்படியென்றால் ஒரு மணி நேரத்தில் சுமார் 165 பேர் மரணமடைகிறார்கள். 4 நிமிடத்தில் 11 பேர்! பெருந்துயரம். எங்கும் மரணத்தின் ஓலம்!

இந்த அவலத்திற்கு இந்த நாட்டை ஆள்பவர்களின் கண்கள் கண்ணீர் மழை பொழிய வேண்டுமே?

அவர்கள் கண் கலங்க மாட்டார்கள். அவர்கள் இதயத்தில் ஈரமில்லாத கல் நெஞ்சக்காரர்கள் அல்லவா?

இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

English summary
Senior Congress leader P Chidambaram has accused that the Centre for 4,000 Corona deaths in a Single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X