திருத்திக்கொள்கிறேன்.. கருத்தை வாபஸ் பெற்ற ப. சிதம்பரம்.. பாய்ந்து வந்த பிடிஆர்.. பரபரப்பு விளக்கம்!
சென்னை: கலால் வரியை குறைப்பதால் மாநில அரசுகளின் வருவாய் குறையும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப . சிதம்பரம் தெரிவித்தார். தற்போது அந்த கருத்தை அவர் வாபஸ் பெற்றுள்ளார். அதே சமயம் கலால் வரி விதிப்பது தொடர்பாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேறு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல்
இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 45 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

ப. சிதம்பரம்
இந்த நிலையில் கலால் வரியை குறைப்பதால் மாநில அரசுகளின் வருவாய் குறையும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப . சிதம்பரம் தெரிவித்தார். அதாவது மாநில அரசுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரியை குறைக்க சொல்கிறார். ஆனால் பொதுவான கலால் வரியை குறைப்பதால் தானாக மாநில அரசுக்கான வருவாயும் குறையும் என்று ப. சிதம்பரம் முன்னதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தனது கருத்தை அவர் வாபஸ் வாங்கினார்.

வாபஸ்
அவர் தெரிவித்துள்ள கருத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பான அறிக்கை வெளியாகி இருக்கிறது. முன்னதாக நிதி அமைச்சர் பேசும் போது கலால் வரியை குறைப்பதாக தெரிவித்தார். ஆனால் அறிக்கையில், கூடுதல் கலால் வரியை குறைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கூடுதல் கலால் வரி மாநில அரசுடன் பகிரப்படுவது இல்லை.

கூடுதல் கலால் வரி
இதனால் மாநில அரசுகளுக்கு பிரச்சனை இல்லை. இந்த விலை குறைவு காரணமாக இழப்பு மத்திய அரசுக்கு மட்டுமே ஏற்படும். நான் என் கருத்தை திறுத்திக்கொள்கிறேன். இருப்பினும் மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் வரி மூலம் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. வாட் வரி மூலம் மட்டுமே மாநில அரசுக்கு நேரடியாக பெட்ரோல், டீசல் வருவாய் கிடைக்கிறது.

ஆனாலும் மாநில அரசுகள்
அதை மாநில அரசுகள் எப்படி இழக்கும் என்று தெரியவில்லை. மத்திய அரசு கூடுதல் நிதி கொடுக்காத பட்சத்தில், மாநில அரசுகள் அந்த வருவாயையும் குறைத்துக்கொள்ள முன்வருவது கடினம். ஆழ்ந்த கடலுக்கும், ராட்சசனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டதை போன்ற நிலை இது ப. சிதம்பரம் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழ்நாடு நிதி அமைச்சர் கலால் வரி குறைப்பு பற்றி வேறு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

பிடிஆர் விளக்கம்
அதன்படி ப. சிதம்பரம் தனது கருத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். நீங்கள் எப்போது வாபஸ் வாங்குவீர்கள் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த பிடிஆர், தமிழ்நாடு வாட் வரி என்பது பெட்ரோல், டீசல் விலை மற்றும், மத்திய அரசு வரிகள் மீதான மொத்த வாரியாக. எனவே மத்திய அரசு வரியை ஒரு ரூபாய் குறைத்தால் தானாக மாநில வரி பெட்ரோலுக்கு 13 பைசா, டீசலுக்கு 11 பைசா குறையும் என்று விளக்கி உள்ளார்.