சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் எல்லையில் நடப்பதை மறைக்கிறார், சீனாவுக்கு நற்சான்று தருகிறார் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தது.

இந்த நிலையில் சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதை பாஜக சுட்டிக் காட்டி விமர்சனங்களை முன் வைத்தது.

பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி! பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி!

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா நிதி குறித்து (பிஎம் கேர்ஸ்) காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.

நிவாரண நிதியம்

நிவாரண நிதியம்

இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்' (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா?

ஊஞ்சலாடும்

2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
EX FM P Chidambaram asks how did the PM cares get money from China's company?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X