சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜீவ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தீர்ப்பு.. இது பிரதமருக்கு தெரியாதா- ப. சிதம்பரம் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: போபர்ஸ் வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என டெல்லி உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா என்ன என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று மாலை உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் உங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. ஆனால் அது உண்மையில்லை.

ராஜீவை மிஸ்டர் கிளீன் என்று கூட சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று பிரதமர் மோடி பிரசாரத்தில் குறிப்பிட்டார்.

தமிழக மாணவர்கள் டெல்லி மாணவர்களின் உரிமையை பறிக்கிறார்கள்.. கெஜ்ரிவாலின் பரபர போன் கால்! தமிழக மாணவர்கள் டெல்லி மாணவர்களின் உரிமையை பறிக்கிறார்கள்.. கெஜ்ரிவாலின் பரபர போன் கால்!

கடும் விமர்சனம்

இதுபெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பதிலடி கொடுத்துள்ளனர். அந்த வகையில் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மோடிக்கு தெரியாதா

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறவே ஆதாரமற்றவை என்று டெல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

பாஜக அரசு

இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அன்றைய பாஜக அரசு முடிவெடுத்தது திரு மோடி அவர்களுக்குத் தெரியாதா?

விரக்தி

இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற முதுமொழி பிரதமர் மோடிக்குத் தெரியாதா? தேர்தலில் தம்முடைய கட்சியின் தோல்வி உறுதி என்ற அச்சம் திரு மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது என ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
EX FM P.Chidambaram says that The PM's remarks on former PM Rajiv Gandhi show the extent of his desperation and fear of defeat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X