சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனா ஆக்கிரமிப்பு -மத்திய அரசிடம் என்ன பதில் உள்ளது..? -ப.சிதம்பரம் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள விவகாரத்தில் மத்திய அரசிடம் என்ன பதில் உள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வினவியுள்ளார்.

மேலும், சீனாவிடம் தோல்வியை ஒப்புக்கொண்டதா அல்லது முந்தைய அரசு மீது மத்திய அரசு குறை சொல்லவுள்ளதா? என அவர் வினவியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கடந்த ஆண்டே பாஜக எம்.பி. தபிர் காவ் நாடாளுமன்றத்தில் பேசி இருந்ததாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்திய எல்லையில் 100 வீடுகள் மற்றும் இரு வழிப்பாதை, கடைவீதி ஆகியவற்றை சீனா நிறுவியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியதாக நினைவுப்படுத்தி உள்ளார்.

P.Chidambaram asks,What is the response of the Central Government to the China occupation?

சர்ச்சைக்குரிய இடத்தை சீனா நிரந்தரமாக தங்கள் வசம் வைத்துக் கொண்டதாகவும் சிதம்பரம் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதனிடையே சீனா எல்லைமீறல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!

மேலும், இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு ஒரு போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி ஆற்றுப்படுகையை ஒட்டி சீனா 101 வீடுகள் கொண்ட கிராமத்தை கட்டமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் இப்போது புயலை கிளப்பியுள்ள நிலையில் ப.சிதம்பரம் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கேள்விக்கணைகளை வீசியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

English summary
P.Chidambaram asks,What is the response of the Central Government to the China occupation?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X