சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிஏஏவால் யாரும் பாதிக்கப்படவில்லையா?.. அப்ப பட்டியலில் முஸ்லீம்களை இணைக்காதது ஏன்?- ப.சி.

Google Oneindia Tamil News

சென்னை: சிஏஏவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால் அந்த பட்டியலில் முஸ்லீம்களை இணைக்காதது ஏன் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தும், கருத்துகளை பரிமாறியும் வருகின்றனர். அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் பாதகமானது அல்ல என மத்திய அரசு பலமுறை தெளிவுப்படுத்திவிட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடியும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுவதற்கான திட்டம் ஏதும் இல்லை என சொல்லவிட்டார். எனினும் தேசத்தின் தலைநகர் டெல்லியிலும், தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

திமுக ராஜ்யசபா வேட்பாளர்.. அந்தியூர் செல்வராஜ் தேர்வுக்காக ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டுகள்திமுக ராஜ்யசபா வேட்பாளர்.. அந்தியூர் செல்வராஜ் தேர்வுக்காக ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டுகள்

சிஏஏ

சிஏஏ

இதனிடையே கொல்கத்தாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், என்னை பொருத்தவரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என இஸ்லாமியர்கள் உறுதியளிக்கிறேன்.

சிறுபான்மை

தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் மக்கள் மனதில் தவறான கருத்தை கூறி பீதியை ஏற்படுத்தி வருகின்றன என்றார் அமித்ஷா. அமித்ஷாவின் இந்த கருத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்பட மாட்டார்கள என அமித்ஷா கூறியுள்ளார்.

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள்

அது சரி சென்றால் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும். ஒரு வாதத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பலன்கள்தான் கிடைக்கும் என்றால் சிஏஏ பட்டியலில் இருந்து முஸ்லீம்களை நீக்கியது ஏன் என தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைதி

அமைதி

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உக்கிரமாக நடந்து வரும் போராட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்முறை வெடித்தது. இதில் 46 பேர் பலியாகிவிட்டனர். இதில் உளவுத் துறை அதிகாரி அங்கிட் சர்மாவும் அடங்குவார். பற்றி எரிந்த டெல்லி இப்போதுதான் மெல்ல மெல்ல அமைதி நிலைக்கு திரும்புகிறது.

English summary
P.Chidambaram in his tweet asks that If the CAA is intended to benefit all minorities (no one will be affected says the HM), then why were Muslims excluded from the list of minorities mentioned in the Act?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X