சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வரை "கோவிடியோட்'' என்று அழைப்பதா?.. மத்திய அமைச்சருக்கு எதிராக.. பொங்கியெழுந்த ப.சிதம்பரம்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சர் முரளிதரன், கேரள முதல்வர் பினராயி விஜயனை "கோவிடியோட்" என்று கூறியதற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா போட்டு தாக்கி வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு 2,00,000 லட்சத்தை கடந்து அபாயகரமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

குட் நியூஸ்... அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி... இந்த மாதமே இந்தியாவில் கிடைக்கும்குட் நியூஸ்... அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி... இந்த மாதமே இந்தியாவில் கிடைக்கும்

அடம்பிடிக்கும் கொரோனா

அடம்பிடிக்கும் கொரோனா

தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் கொரோனா கட்டுக்குள் வராமல் அடம்பிடித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுவையில் சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டது. மேற்கு வங்கத்திலும் 8 கட்ட வாக்குப்பதிவில் 4 கட்டம் நடந்து முடிந்து விட்டது.

பினராயி மீதுமுரளிதரன் தாக்கு

பினராயி மீதுமுரளிதரன் தாக்கு

இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தின்போது பெருமளவு மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மறந்து கூடியதால் அதுவே கொரோனா அதிகரிக்க முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா நெறிமுறைகளை மீறி விட்டார் என பா.ஜ.க. எம்.பி. முரளிதரன் என் குற்றம் சாட்டினார்.

பினராயி விஜயன் கோவிடியோட்

பினராயி விஜயன் கோவிடியோட்

இது தொடர்பாக முரளிதரன் கூறுகையில், 'கோவிடியோட்' என்பதன் பொருள் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்கள் என்பது ஆகும். கொரோனா தடுப்பு நெறிமுறையை தொடர்ந்து மீறும் பினராயி விஜயனுக்கு 'கோவிடியோட்' தவிர வேறு எந்த வார்த்தையும் பயன்படுத்த முடியாது. பினராயி விஜயனுக்கு கடந்த 4-ம் தேதி பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. ஆனால் அவர் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் கடந்த 6-ம் தேதி தனது வாக்கினை பதிவு செய்தார்

ப.சிதம்பரம் கேள்வி

ப.சிதம்பரம் கேள்வி

முரளிதரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' மத்திய அமைச்சர் முரளிதரன், கேரள முதல்வர் பினராயி விஜயனை "கோவிடியோட்" என்று கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத மொழியைப் பயன்படுத்திய அமைச்சரை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க தலைமையில் யாரும் இல்லையா? என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

English summary
Former Union Finance Minister P. Chidambaram has condemned Union Minister Muralitharan for calling Kerala Chief Minister Binarayi Vijayan a Covidiot
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X