சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனப் படை வாபஸை வரவேற்கிறேன்.. ஆனால் எங்கிருந்து வாபஸ் பெற்றார்கள்.. அதைச் சொல்லுங்க.. ப.சி கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: சீனப் படைகள் வாபஸ் பெற்றதை வரவேற்கிறேன். ஆனால் அவை எங்கிருந்து வாபஸ் பெற்றார்கள் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் கூறுகையில் சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன். அந்த படைகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கியது என்பதை யாராவது (மத்திய அரசு) சொல்வார்களா?

அதுபோல் தற்போது எந்த இடத்தில் அவை நிலை கொண்டுள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியுமா? அது போல் இந்திய படைகளும் எந்த இடத்திலிருந்து பின்வாங்கின?.

நம்ப முடியாது.. சீனப் படையினர் வாபஸானாலும்.. உஷார் நிலையைக் கைவிடாத இந்தியா! நம்ப முடியாது.. சீனப் படையினர் வாபஸானாலும்.. உஷார் நிலையைக் கைவிடாத இந்தியா!

சிதம்பரம்

சிதம்பரம்

சீன ராணுவமோ அல்லது இந்திய ராணுவமோ ஒரு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இன்னொரு எல்லைக்கு நகர்ந்தனரா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் அவசியமானது. ஏனெனில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி எந்த இடத்தில் என்ன ஆனது என்பதை கண்டறிய இந்திய மக்கள் புதையல் வேட்டை போல் தேடி வருகிறார்கள் என ட்விட்டரில் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைகலப்பு

கைகலப்பு

லடாக்கில் உள்ள கால்வனில் கடந்த மே மாதம் முதல் இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பாங்கோ ஏரியில் திடீரென இருதரப்பினருக்கும் இடையே மே மாதம் கைகலப்பு நடந்தது. இதை பேசி தீர்ப்பதற்குள் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15ஆம் தேதி அத்துமீறிய சீன ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இது நாட்டு மக்களை கொந்தளிப்புக்குள்ளாக்கியது. பின்னர் ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து லடாக் எல்லையில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். இதையடுத்து இரு தினங்கள் கழித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன ராணுவ அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

செய்திகள்

செய்திகள்

வீடியோ காலில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சீன ராணுவம் 1.5 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கியதாக செய்திகள் வந்தன. அது போல் இந்திய படைகளும் பின்வாங்கின. எனினும் பாங்காங் ஏரி பகுதியில் சர்ச்சைக்குரிய பிங்கர் பகுதியில் குறைந்த அளவிலான சீன ராணுவத்தினர் நடமாட்டம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் கால்வன் பிரச்சினை குறித்து ப சிதம்பரம் தனது ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ப சிதம்பரத்தின் கேள்விகளை ட்விட்டர்வாசிகள் சிலர் வரவேற்றும் சிலர் எதிர்த்தும் உள்ளனர்.

English summary
Former Minister P Chidambaram in his twitter that Indian people are on a Treasure Hunt to find out what happened on June 15 and where.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X