சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பி கொடுத்துட்டார் பாருங்களேன்.. ப.சிதம்பரம் செம கிண்டல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் விவகாரம் அமெரிக்காவை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம்- வீடியோ

    சென்னை: ரஃபேல் ஆவணங்களை திருடிய திருடன் அதை ஒரே நாளில் திருப்பி கொடுத்து விட்டான் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

    ரபேல் போர் விமானம் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட, சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை ஆஜரான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ஆவணங்கள் திருடப்படவில்லை என்றும், அது நகல் எடுக்கப்பட்டது என்றும் வேணுகோபால் தெரிவித்தார்.

    P Chidambaram says Rafale documents may be returned by the thief

    இதுகுறித்து டுவிட்டரில் இன்று காலை ப.சிதம்பரம் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், புதன் கிழமை திருடப்பட்ட ஆவணம் வெள்ளிக்கிழமை நகல் எடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது. ஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு கேலியாக தெரிவித்துள்ளார்.

    ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி ரபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி

    ரபேல் ஆவணம் தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு எதிராக சட்டத்தை கொண்டு மிரட்டினார்கள் என்றும் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் 3 விஷயங்கள்தான் முக்கியமாக பேசப்படப்போகிறது. அவை, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    On Wednesday, it was 'stolen documents', On Friday, it was 'photo copied documents', I suppose the thief returned the documents in between on Thursday, says, P Chidambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X