சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் தோல்வி.. இதுதான் இந்த ஆண்டின் பாஜகவின் கதை.. ப.சி.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 23-12-2019 | Morning News | oneindia tamil

    சென்னை: ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்துவிட்டது என ப சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடந்துமுடிந்தது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்த தேர்தலில் பாஜகவும் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த ஏஎஸ்ஜேயூவும் தற்போது தனித்து களம் கண்டன. பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக ரகுவர் தாஸே களமிறக்கப்பட்டார்.

    ஜார்க்கண்டில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் பெரும் வெற்றி: பாஜகவுக்கு மாபெரும் தோல்விஜார்க்கண்டில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் பெரும் வெற்றி: பாஜகவுக்கு மாபெரும் தோல்வி

    தேர்தல் முடிவுகள்

    தேர்தல் முடிவுகள்

    அது போல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. இவர்கள் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினர். இந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.

    நிச்சயம்

    நிச்சயம்

    மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தேவை. இதில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஜேஎம்எம்- காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. அதே சமயம் பாஜக இந்த தேர்தலில் தோல்வியை தழுவிவிட்டது.

    2019இல் இதுதான் கதை

    2019இல் இதுதான் கதை

    இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஹரியானாவில் பொய்த்து போனது. மகாராஷ்டிராவில் மறுக்கப்பட்டது. ஜார்க்கண்டில் தோற்கடிக்கப்பட்டது. இதுதான் 2019-ஆம் ஆண்டில் பாஜகவின் கதை.

    பங்கேற்க வேண்டும்

    பாஜக அல்லாத கட்சிகள் தங்களது பார்வைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸில் பேரணியில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    P.Chidambaram says that All non-BJP parties must raise their sights and rally around the Congress to save the Constitution of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X