• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உங்கள் பொருளாதார பேக்கேஜ் பலனில்லை .. ஆர்பிஐ ஆளுநர் இப்படி சொல்லிட்டாரே.. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

|

சென்னை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நெகட்டிவ் என்ற நிலைக்கு செல்லப் போவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்ததை சுட்டிக்காட்டி பிரதமர் மற்றும் மத்திய நிதித் துறை அமைச்சரை கேள்விகளால் துளைத்து உள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

மகிழ்ச்சி தகவல்.. உலகம் முழுக்க பெரு நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டோன் போன்றவற்றால் சீரழிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி பேக்கேஜ் அறிவிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

இதன் பிறகு, தொடர்ச்சியாக தினமும் மாலை, செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த பேக்கேஜ் தொடர்பாக விளக்கம் அளித்து வந்தார்.

மே மாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரசிய மாற்றங்கள் இருக்கும்.. வெதர்மேன் கணிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கி ஆளுநர்

இந்நிலையில்தான், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். அப்போது, இந்தியாவில் உள்நாட்டு தேவை குறைந்து விட்டதாகவும், பொருட்களின் விற்பனை மிகவும் மோசமாக இருப்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வரும் நிதியாண்டில் நெகட்டிவ் என்ற நிலைக்கு செல்லும் என்று கூறியிருந்தார்.

நெகட்டிவ்

நெகட்டிவ்

இந்த நிலையில்தான் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் கூறியதை பாருங்கள்.

பொருட்களுக்கான தேவை என்பது சீர்குலைந்து விட்டது. 2020-21ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி நெகட்டிவ் நிலைக்கு செல்லும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இப்படி கூறிய பிறகும், எதற்காக அதிகமான நிதியை புழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று அவர் அறிவிப்புகளை வெளியிடுகின்றார்?

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

அவர் அரசை பார்த்து உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள். நிதி சார்ந்த நடவடிக்கைகளை எடுங்கள் என்று பகிரங்கமாக கூறி விட வேண்டும்.

அரசு இவ்வாறு பொருளாதாரத்தை எதிர்மறையான வளர்ச்சிக்கு இழுத்துச் சென்றதை நினைத்து, ஆர்.எஸ்.எஸ் வெட்கப்பட வேண்டும்.

பெருமை தேவையா

பெருமை தேவையா

மத்திய அரசு அறிவித்த நிதி பேக்கேஜ் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது. அப்படி அறிவித்த பிறகும் பொருளாதார வளர்ச்சி மேம்பட போவதில்லை என்பதுதான் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்து எனும்போது, இன்னுமா, பிரதமரும், நிர்மலா சீதாராமனும், தங்களது பேக்கேஜுக்காக, புகழ்ந்து கொண்டு இருப்பார்கள்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார், ப.சிதம்பரம்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Even after RBI’s statement, is the PM or Nirmala Sitharaman lauding themselves for a package that has fiscal stimulus of less than 1% of GDP? RSS should be ashamed of how the government has dragged the economy into negative growth territory, says P.Chidambaram.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more