சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்சகட்ட பரபரப்பில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு..சிபிஐ கேவியட் மனுதாக்கல் - வீடியோ

    சென்னை ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமின் தர மறுத்ததை தொடர்ந்து அவர் எந்நேரமும் கைசெய்யப்படலாம் என தகவல்கள் நேற்றில் இருந்து உலா வருகின்றன.

    போதாக்குறைக்கு 24 மணி நேரத்திற்குள் 4 முறை ப.சிதம்பரம் இல்லத்துக்கு சென்றுவிட்டனர் சி.பி.ஐ.அதிகாரிகள். இப்படி டெல்லியில் விறு விறு காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், சிதம்பரம் ஒரு வேளை கைது செய்யப்பட்டால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

    p chidambaram supporters may hold protests if he was arrested

    சென்னையில் போராட்டம் நடத்தினால் அதில் தானே தலைமையேற்கிறேன் என கூறியிருக்கிறாராம் கே.எஸ்.அழகிரி. இதேபோல் கார்த்தி சிதம்பரம் அண்மையில் வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதியிலும் போராட்டத்துக்கு தயாராக இருக்குமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சிதம்பரம் ஆதரவாளர்கள் போராட்டம் என்ற குறுகிய வட்டத்துக்கு பதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தும் எண்ணமும் இருக்கிறதாம்.

    இதற்கு திமுக தலைவர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒத்துழைப்பார்களா என்ற தயக்கமும் கே.எஸ்.அழகிரிக்கு உள்ளதாம். கார்த்தி சிதம்பரம் தனது தந்தைக்காக நேற்றிரவு முழுவதும் கண் இமைக்காமல் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், எதுவும் நடக்கலாம் ஆயத்தமாக இருங்கள் போராட்டத்திற்கு என்று விடிய விடிய தனது ஆதரவாளர்களின் உருகியிருக்கிறார்.

    மொத்தத்தில் ப.சிதம்பரம் விவகாரம் தமிழகத்திலும் அனலைக் கிளப்பியுள்ளது.

    English summary
    Former union minister P Chidambaram supporters are gearing up to hold protests if he was arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X