சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்

    சென்னை: சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்து வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் மறைந்த முன்னாள் தமிழக சபாநாயகர் பி.எச். பாண்டியன்.

    அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பி.எச். பாண்டியன். எம்ஜிஆர். ஜெயலலிதா, ஓபிஎஸ் காலங்களில் அதிமுகவின் முன்னணி தலைவராக விளங்கியவர்.

    1960களின் இறுதியில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது ஆளவந்தார் கொலை வழக்கு. இக்கொலை வழக்கை நடத்திய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜே.எஸ்.அதனேஷியஸிடம் ஜூனியராக பணியில் சேர்ந்தார் பி.எச். பாண்டியன். பின்னர் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக இருந்த .ஆர்.கோகுலகிருஷ்ணன், வி.ராமசாமி ஆகியோரிடமும் ஜூனியராக பணியாற்றியவர் பி.எச் பாண்டியன்.

    தனித்தனி தேர்தல்.. சொதப்பிய அதிமுகவின் பிளான்.. மூத்த தலைகள் கோபம்.. அடுத்து என்ன நடக்கும்?தனித்தனி தேர்தல்.. சொதப்பிய அதிமுகவின் பிளான்.. மூத்த தலைகள் கோபம்.. அடுத்து என்ன நடக்கும்?

    சபாநாயகராக பாண்டியன்

    சபாநாயகராக பாண்டியன்

    பின்னர் எம்.ஜி.ஆர் .அதிமுகவை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். 1977, 1980, 1984-ம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 1985-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் சபாநாயகராக பி.எச். பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

    விகடன் கார்ட்டூன் விவகாரம்

    விகடன் கார்ட்டூன் விவகாரம்

    1987-ல் ஆனந்த விகடன் அட்டையில் சட்டசபையை விமர்சிக்கும் வகையில் அட்டைப்பட கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது. இதனை கண்டித்து விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பினார் சபாநாயகர் பி.எச். பாண்டியன்.

    பி.எச்.பாண்டியன் உத்தரவு

    பி.எச்.பாண்டியன் உத்தரவு

    இதனடிப்படையில் சட்டசபைக்கு வரவழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியனை கூண்டில் ஏற்றிய பி.எச். பாண்டியன், அவரை மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார். இதற்கு பாலசுப்பிரமணியன் மறுக்க அவரை 3 மாதம் சிறையில் அடைக்க பி.எச். பாண்டியன் உத்தரவிட்டார்.

    சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம்

    சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம்

    இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பான தலைப்புச் செய்தியானது. பி.எச். பாண்டியனின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தமக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனை பெற முடியாது என்றார் பி.எச். பாண்டியன். அப்போதுதான், தாம் சட்டசபைக்கு சபாநாயகர்; நீதிமன்றத்தை விட வானளாவிய அதிகாரம் தமக்கு இருக்கிறது என பிரகடனம் செய்தார் பி.எச் பாண்டியன்.

     இன்றும் பிஎச் பாண்டியன் பிரகடனம்

    இன்றும் பிஎச் பாண்டியன் பிரகடனம்

    ஆனால் நிலைமை மோசமாவதை விரும்பாத எம்ஜிஆர்,, விகடன் பாலசுப்பிரமணியனை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவரது இந்த முழக்கத்தை இன்றளவும் பல்வேறு சூழ்நிலைகளில் சபாநாயகர்கள் பின்பற்றவும் செய்கின்றனர். பல்வேறு சட்டசபை வழக்குகளில் பி.எச். பாண்டியன் தொடர்பான இந்த விவகாரமும் முக்கிய இடம் பிடிக்கிறது.

    English summary
    Tamilnadu Former Speaker P.H. Pandian who passed away today, had declared that the Assembly Speaker had sky-high powers in 1987.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X