சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்

    சென்னை: தமிழக முன்னாள் சபாநாயகராக இருந்த பி. எச் பாண்டியன் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி அணியில் இருந்து கொண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றவர்.

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பி.எச். பாண்டியன். 1945-ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்தார். அதிமுக எம்எல்ஏவாகவும் எம்பியாகவும் பணியாற்றியவர்.

    கடந்த 1977, 80, 84 ஆகிய ஆண்டுகளில் சேரன்மாதேவி எம்எல்ஏவாக இருந்தார். 1985-89-ஆம் ஆண்டு வரை தமிழக சட்டசபை சபாநாயகராகவும் இருந்தார் பி.எச் பாண்டியன்.

    தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்

    ஜானகி அணி

    ஜானகி அணி

    எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989-இல் அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது ஜானகி அணி சார்பில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்டு பி எச் பாண்டியன் வெற்றி பெற்றார்.

    அமைப்புச் செயலாளர்

    அமைப்புச் செயலாளர்

    அப்போது சேரன்மாதேவி தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் ஜெயலலிதா அணியில் சேர்ந்த பி.எச். பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றினார்.

    சேரன்மாதேவி எம்எல்ஏ

    சேரன்மாதேவி எம்எல்ஏ

    அவர் 1999-ஆம் ஆண்டு திருநெல்வேலி எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரது மகன் மனோஜ் பாண்டியன், 2001- இல் சேரன்மாதேவியின் எம்எல்ஏவாக இருந்தார்.

    மர்மம்

    மர்மம்

    ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியை ஆதரித்தார். அது போல் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    English summary
    P.H.Pandian was one of the only two candidates elected to the Tamil Nadu Legislature from the Janaki Ramachandran Faction of AIADMK in 1989.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X