சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டமும், ஜனநாயகமும் ஒரு சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்.. அயோத்தி தீர்ப்பு குறித்து பா.ரஞ்சித்!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமும், ஜனநாயகமும் ஒரு சார்புடையதாக மாறிக்கொண்டே போனால், சட்டத்தின் முன் எப்படி எல்லாரும் சமம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்க உத்தரவிட்டது.

Pa Ranjith on Ayodhya verdict: how are they all equal before the law?

அதற்கு பதிலாக முஸ்லீம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அயோத்தியிலேயே மசூதி கட்ட வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் சிலர் சட்டத்தின்படியும், ஆதாரத்தின்படியும் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின்பேரில் தீர்ப்பு வழங்கியிருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பதிவில், "ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... "சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Pa Ranjith on Ayodhya verdict: : If law and democracy are to become one bias, how are they all equal before the law?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X