சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா? நிஜம் இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Pakistan made #GoBackModi trend?Truth Revealed

    சென்னை: #GoBackModi என்று டுவிட்டரில் கடந்த 11ஆம் தேதி, தேசிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டதன் பின்னணியில், பாகிஸ்தான் இருப்பதாக வெளியான தகவல்கள் பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், கோபேக்மோடி (#GoBackModi) என்ற பெயரில் ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது சமீபகாலமாக வாடிக்கையாகிவிட்டது. லோக்சபா தேர்தலில் காலகட்டத்திலிருந்து இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    இது போன்ற ஹேஸ்டேக்குகள், தேசிய அளவில் நம்பர்-ஒன் இடத்தையும் பிடித்து விடுகிறது. இது பாஜக ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. பாஜக ஆதரவு நெட்டிசன்கள் பதிவுகளில் இதை பார்க்க முடிகிறது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தித் திணிப்பு போன்ற பல்வேறு விஷயங்களுக்காக, மோடியின் செயல்பாட்டால், அதிருப்தியடைந்துள்ளதால், தாங்கள் இவ்வாறு ஹேஷ்டேக் போட்டு ட்ரண்ட் செய்து வருவதாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியாலும், பாஜக மீதான பயத்தாலும் செய்யப்படும் பரப்புரை என்று ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். #GoBackModi என்ற ஹேஷ்டேக்கிற்கு, மாற்றாக தமிழகம் வெல்கம்ஸ் மோடி #TNWelcomesModi என்பது போன்ற ஹேஷ்டேக்குகளை பாஜக ஆதரவாளர்கள் போட்டு வந்தாலும் கூட அது தேசிய அளவில் முதலிடம் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

    டிவி சேனல்கள்

    டிவி சேனல்கள்

    கடந்த 11ஆம் தேதி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்திக்க மாமல்லபுரம் வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போதும் இதே போன்ற #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. சீன மொழியிலும் கூட, கோபேக்மோடி என்ற அர்த்தத்தில் வரக்கூடிய வாசகங்களை எதிர்க்கட்சியினர் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில்தான் டெல்லியிலிருந்து இயங்கக்கூடிய முன்னணி ஆங்கில டிவி சேனல்கள், சில அடுத்தடுத்து இந்த ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக செய்திகளை வெளியிட்டன.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    நரேந்திர மோடிக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கெட்ட பெயரை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து பல்வேறு ட்வீட்டுகள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி போடப்பட்டு, அது தேசிய அளவில் ட்ரெண்ட் செய்ய வைக்கப்படுவதாக அந்தச் டிவி சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பாகின.
    ஆனால் எந்த நாட்டிலிருந்து கொண்டாலும் தமிழகத்திலிருந்து அல்லது இந்தியாவில் இருந்து இந்த ட்வீடுகள் போடப்படுவது போல செட்டிங் செய்து ட்விட்டர் பயன்படுத்த முடியும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.

    பாகிஸ்தானில் இல்லையே

    பாகிஸ்தானில் இல்லையே

    ஆனால் இது இதுபோன்ற செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் தேசிய அளவில் #GoBackModi ட்ரெண்டாக்கி கொண்டிருந்தபோது அதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் அந்த ஹேஷ்டேக் டிரெண்ட்டாகவில்லை. பாகிஸ்தானிலிருந்து இதுபோல வீட் செய்திருந்தால் அந்த நாட்டிலும் அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி இருக்க வேண்டும். நம்பர் ஒன் இடத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை டாப் 10 இடங்களுக்குள் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை. இடத்தின் பெயரை மாற்றி டிவீட் போட்டாலும் கூட பாகிஸ்தானில் அந்த டீவீட்டுகள் எதிரொலித்திருக்க வேண்டும். டிவிட்டர் செட்டிங் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

    காஷ்மீர் பற்றிதான்

    காஷ்மீர் பற்றிதான்

    கடந்த 11ம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை #GoBackModi அதிகம் ட்வீட் செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த காலகட்டத்தில், பாகிஸ்தானின் டாப் 10 டிரெண்டிங்கில் அது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியா தொடர்பாக அந்த நேரத்தில் பாகிஸ்தானில் டிரெண்ட்டாகி கொண்டிருந்த ஒரே ஹேஷ்டேக் #KashmirChained என்பது மட்டுமே. கோபேக் மோடி ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி வருவதால், அதிருப்தியிலிருந்த பாஜக ஆதரவாளர்கள் யாரோதான் இதுபோல பத்திரிகைகளுக்கு செய்திகளை கொடுத்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    English summary
    Pakistan didn't trend #GoBackModi, as trend map reveals the truth behind this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X