சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவு வாங்கிய பேனர்.. சுபஸ்ரீ பெற்றோருக்கு பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி நேரில் ஆறுதல்

சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆறுதல் கூறினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Chennai Girl Subashree lost her life due to illegal Banners

    சென்னை: சென்னை பள்ளிக்கரணை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. பள்ளிக்கரணை அருகே தனது டூவீலரில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக சாலைகள் முழுக்க பேனர்களை வைத்திருந்தார்.

    Pallavaram DMK MLA Karunanidhi meets Subasrees Family

    இதில் ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உடல் நசுங்கி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உடனடியாக இந்த துயர சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். "அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்பலிதான் கொடுப்பது" என்று ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

    Pallavaram DMK MLA Karunanidhi meets Subasrees Family

    இப்போது, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் சடலம் வைக்கப்பட்டு உள்ளது. தகவலறிந்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி விரைந்து ஆஸ்பத்திரி சென்றார். அங்கு மகளை பறிகொடுத்து கண்ணீருடன் கதறி கொண்டிருந்த பெற்றோரை கட்சி சார்பில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    வயிறு எரியுதுங்க.. யாருமே உதவல.. இன்னொரு சுபஸ்ரீ உயிர் பறிபோயிட கூடாது.. கொதிக்கும் மக்கள்!வயிறு எரியுதுங்க.. யாருமே உதவல.. இன்னொரு சுபஸ்ரீ உயிர் பறிபோயிட கூடாது.. கொதிக்கும் மக்கள்!

    முன்னதாக, சென்னை பள்ளிக்கரணையில் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன என்றும் ஐகோர்ட் காட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pallavaram DMK MLA Karunanidhi meets Subasrees Family and consoling them in Chrompet Gov Hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X