சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.. எதுக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Panruti constituency MLA Satya Panneerselvam has been removed from the AIADMK

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்கக்கும் கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும்,கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணை செயலாளர் சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ, பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம்,

மெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவுமெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவு

பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தவைர் ராம்குமார் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Panruti constituency AIADMK MLA Satya Panneerselvam has been abruptly removed from the AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X