சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி ஃப்ரீயா போக முடியாது.. கேட்டை போடுவாங்க.. பரனூர் சுங்கச் சாவடி நாளை முதல் இயங்கும்

Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு அருகேயுள்ள, பரனூர் சுங்கச்சாவடி 35 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

Recommended Video

    பரனூர் சுங்கச் சாவடி நாளை முதல் இயங்கும்

    செங்கல்பட்டு அருகேயுள்ளது, பரனூர் சுங்கச்சாவடி. சென்னையின் தலைவாசல் போன்ற பகுதி. கடந்த ஜனவரி 26ம் தேதி நள்ளிரவில் சுங்கச்சாவடி ஊழியர்கள், அரசு பேருந்து ஓட்டுனர் இடையே சுங்க கட்டணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    Paranur Toll Plaza will re open from tomorrow

    இதையடுத்து பிற ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பும் சேர்ந்து கொண்டு, சுங்கச்சாவடியை சூறையாடிவிட்டனர்.அன்று முதல் இன்று வரை, சுங்கச்சாவடியை பழுதுபார்க்கும் பணிகள்தான் நடந்தன.

    எனவே பொதுமக்கள், பேருந்துகள், அனைத்து வாகனங்கள் உள்பட அனைவரும் உரிய நேரத்தில் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடைந்தனர். காரணம், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல், அனைத்து வண்டிகளும் இயல்பாக ஓடிக் கொண்டிருந்தன.

    Paranur Toll Plaza will re open from tomorrow

    வாகன ஓட்டிகளும், கட்டணம் பிடித்தம் இல்லாமல் இருந்ததால், மகிழ்ச்சியோடு கடந்து சென்றனர். இதற்கிடையில், சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடக்கோரி சில தினங்களுக்கு முன்னாள் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

    ஆனால், மீண்டும் நாளை முதல் புதுப்பொலிவுடன் சுங்கச்சாவடி இயக்கப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. எனவே நாளை முதல் மீண்டும், டிராபிக், மீண்டும் கட்டண செலவு காத்திருக்கிறது மக்களே.

    English summary
    Paranur Toll Plaza will re open from tomorrow, says officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X