சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேய் பிறையில் மாணவர் சேர்க்கை.. நிறைந்த அமாவாசையில் டாஸ்மாக் கடை திறப்பு.. வருந்தும் பெற்றோர்

Google Oneindia Tamil News

சென்னை: தேய்பிறையான நேரத்தில் மாணவர் சேர்க்கையை நடத்திவிட்டு நிறைந்த அமாவாசையில் டாஸ்மாக் கடைகள் திறப்பை அறிவித்தது தொடர்பாக தமிழக அரசு மீது பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து வாங்குவது பெரும்பாலானவர்களின் பழக்கமாகும். எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மங்களகரமான நாள், மங்களகரமான நேரம் என பார்த்து பார்த்து தங்கள் செயல்களை செய்வர்.

பெரும்பாலும் திருமணங்கள், காதுகுத்து, சீமந்தம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா, வீடு குடித்தனம் போதல் உள்ளிட்டவை வளர்பிறை காலத்தில் அதாவது அமாவாசை பிறப்பிற்கு பிறகு போனால் நிலவை போல் நம் வாழ்வும் வளர்ச்சி அடையும் என்பது ஐதீகம்.

தண்டனையை அனுபவித்து விட்டோம்..விடுதலை வேண்டும் - கைதி ரவிச்சந்திரன் முதல்வருக்கு கடிதம்தண்டனையை அனுபவித்து விட்டோம்..விடுதலை வேண்டும் - கைதி ரவிச்சந்திரன் முதல்வருக்கு கடிதம்

வேலைக்கு விண்ணப்பித்தல்

வேலைக்கு விண்ணப்பித்தல்

அது போல் நல்ல காரியங்கள் வேலைக்கு விண்ணப்பித்தல், புதிதாக தொழில் தொடங்க வங்கி கடனுக்கு விண்ணப்பித்தல், திருமண பதிவு செய்தல், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் மற்றும் கட்டணம் செலுத்துல் என எந்த புதிய செயலாக இருந்தாலும் அமாவாசை நாளில் தொடங்க மக்கள் விரும்புவதுண்டு.

தமிழகம்

தமிழகம்

கடந்த 5 மாதங்களாக கொரோனா லாக்டவுனால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் அரசு கூறிய ஆவணங்களுடன் பள்ளிகளுக்கு வந்து மாணவர் சேர்க்கையை நடத்தினர்.

டாஸ்மாக் கடைகள்

டாஸ்மாக் கடைகள்

நேற்று தேய் பிறை நாளில் புதிதாக மாணவர் சேர்க்கை நடத்தியது குறித்து பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று நிறைந்த அமாவாசை நாளில் டாஸ்மாக் கடைகள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றப்பட்டு திறக்கப்பட்டன. தேய் பிறை நேரத்தில் பள்ளிச் சேர்க்கையை தொடங்கிவிட்டு அமாவாசை நாளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதில் என்ன அவசியம் இருக்கிறது என பெற்றோர் கேள்வி எழுப்புகிறார்கள்.

Recommended Video

    திடீரென Stage-லிருந்து கீழறங்கிய Collector | Women Police Officer-க்கு Salute | Oneindia Tamil
    வருமானம்

    வருமானம்

    மாணவர்களின் வருங்காலத்தை விட டாஸ்மாக் வருமானம்தான் தமிழக அரசுக்கு பெரிதாகிவிட்டதா என கேள்வி எழுப்பினர். மேலும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகள் திறக்கும் நேரத்தில் அமாவாசை நெருங்கினால் அன்றைய தினமே பல தனியார் பள்ளிகள் வகுப்புகளை தொடங்கும் நிலையில் அரசோ தேய் பிறை நாளில் புத்தம் புதிய வகுப்புகளுக்கான சேர்க்கையை நடத்தியுள்ளதை எண்ணி பெற்றோர் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Parents are getting saddened because of School admission started in waning of moon while Tasmac shops are being opened in new moon day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X