சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி! 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்- வீடியோ

    சென்னை: எழும்பூர் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார் பரிதி இளம்வழுதி.

    சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் பரிதி இளம்வழுதி. இவரது தந்தை இளம்வழுதி. பக்கா திமுகக்காரர். இவர் வழியையே பரிதியும் பின்பற்றினார்.

    திமுகவின் சிறந்த பேச்சாளராக இருந்தார் பரிதி. இவர் 1984-ஆம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த அவருக்கு அப்போது வயது 25 மட்டுமே ஆகும்.

    [இந்திரஜித், அபிமன்யு போன்றவர் பரிதி இளம்வழுதி என்பார் கருணாநிதி.. ஸ்டாலின் புகழாரம்]

    ஜெ. ஆட்சி

    ஜெ. ஆட்சி

    கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் வரை சென்னை எழும்பூர் தொகுதியில் தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றினார்.

    பரிதி

    பரிதி

    அப்போது வெறும் 7 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அதன் முன்னணி தலைவர்கள் அனைவரும் தோற்ற நிலையில் கருணாநிதி சட்டசபைக்கு சென்றார். அவருக்கு துணையாக பரிதி இளம்வழுதியும் சென்றார்.

    86 வாக்குகள் அதிகம்

    86 வாக்குகள் அதிகம்

    திமுகவின் கோட்டையாக விளங்கிய எழும்பூர் தொகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டு பரிதி போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். கடும் போட்டி நிலவிய நிலையில் வெறும் 86 ஓட்டுகள் அதிகம் பெற்று பரிதி வெற்றி பெற்றார்.

    தோல்வி

    தோல்வி

    அதுபோல் 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எழும்பூர் தொகுதியில் அதிமுக, தேமுதிக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பரிதி 192 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.

    எழும்பூரில் தோல்வி

    எழும்பூரில் தோல்வி

    திமுகவில் அதிருப்தி காரணமாக விலகியே இருந்த பரிதி, 2013-இல் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதற்கு அடுத்த நாளே அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி தோல்வியை சந்தித்தார்.

    English summary
    Ex Minister Parithi Ilamvazhuthi won the 2001 election by 86 votes. He was elected for Egmore constituency for 5 times.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X