சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலுடன் கை கோர்க்கும் பாரிவேந்தர்.. உருவாகிறதா புதிய கூட்டணி.. பரபரக்கும் அரசியல் களம்

கமலுடன் பாரிவேந்தர் இணைய போவதாக தகவல்கள் வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணிக்கு தயார் - கருணாஸ்

    சென்னை: இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கமல் கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வருகின்றன.

    கடந்த முறை பாஜகவுடன் கூட்டு வைத்தர் பாரிவேந்தர். அப்போது பாஜக சார்பான தமிழக தேர்தல் செலவுகளை எல்லாவற்றையும் பாரிவேந்தர்தான் கவனித்து கொண்டதாக சொல்லப்பட்டது. மோடி வெற்றி பெற்றதும் டெல்லிக்கு சென்று கட்டிப்பிடித்து கொண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.

    ஆனால் அதோடு சரி.. வருஷம் ஆக ஆக பாஜக தரப்பில் யாருமே பாரிவேந்தனரை கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தேர்தலில் பணம் தரக்கூடாது என்ற உணர்வுடன் இருக்கிறோம். எங்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை, அங்கீகாரத்தை அது தரவில்லை.

    புலம்பிய பாரிவேந்தர்

    புலம்பிய பாரிவேந்தர்

    இதே பாஜகவுக்கு கடந்த காலங்களில் நாங்கள் எவ்வளவோ செய்திருக்கிறோம். கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையுடன், பழைய மரியாதையையும் சேர்த்துக் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து பரிசீலிப்போம்" என்று புலம்பி தள்ளினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர்

    விஷயம் இதுதான், போனமுறை பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். அதனால் இந்த முறையும் அதே தொகுதியை கேட்கிறர். ஆனால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் அந்த தொகுதி பாரிவேந்தருக்கு கிடைக்காது என தெரிகிறது. அதனால்தான் அதிலிருந்து விலக நினைத்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    இந்த நிலையில் மக்கள் நீதிமய்யத்தில் இணைய போவதாக ஒரு தகவல் வெளியானது. அதற்கேற்றபடி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கமலை நேரில் சந்தித்து ஆலோசனையும் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் செலவு

    தேர்தல் செலவு

    சமீபத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மாணவர்களுக்கு 3 ஆண்டு படிப்புக்கான செலவு அதாவது 45 கோடி ரூபாயை பாரிவேந்தர் ஏற்று கொண்டுள்ளது மக்களின் கவனத்தை திருப்பி உள்ளது. மேலும் தேர்தலுக்கு பணம் தரக்கூடாது என்ற முடிவு கமலை போலவே பாரிவேந்தருக்கும் இருப்பதால் இந்த கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளது. ஒருவேளை கமல் கட்சியில் பாரிவேந்தர் இணைந்தால், தேர்தல் செலவுகளை பாரிவேந்தர் ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சொல்லப்படுகிறது.

    English summary
    IJK Leader Parivendhar meets MNM Leader Kamal hasan in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X