சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவில் முயன்று.. மய்யமாக திரும்பி.. திமுக பக்கம் பாய்ந்த பாரிவேந்தர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவா மய்யமா?.. பேச்சுவார்த்தை யாரோடு செய்கிறார் பாரிவேந்தர்- வீடியோ

    சென்னை: இந்திய ஜனநாயகக் கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்கிறது. அக்கட்சித் தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசி தனது கட்சியின் ஆதரவை திமுகவுக்குத் தெரிவித்தார்.

    இந்திய ஜனநாயகக் கட்சி கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இந்த முறையும் அதே கூட்டணியில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வரலாற்று விசித்திரமாக பாஜகவுடன், அதிமுக கூட்டணி போட்டு விட்டதால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள குட்டிக் கட்சிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் தொகுதியை கேட்டு வந்த இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அது இல்லை என்று கூறி விட்டது அதிமுக.

    Also Read| பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கு காரணம் பாமக.. பாரிவேந்தர் பரபர பேட்டி

    திமுகவுடன்

    திமுகவுடன்

    ஆனால் தற்போது திடீர் திருப்பமாக திமுக பக்கம் இந்திய ஜனநாயகக் கட்சி சாய்ந்து விட்டது. இருப்பினும் திமுகவிடம் தொகுதி கேட்கவில்லை என்றும் ஆதரவு மட்டுமே இப்போது தெரிவித்துள்ளதாகவும் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

    இன்றே முடிவு

    இன்றே முடிவு

    இதையடுத்து இன்று அண்ணா அறிவாலயம் வந்தார் பாரிவேந்தர். அங்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் திமுக கூட்டணியில் பாரிவேந்தரும் இணைந்துள்ளார்.

     இதுவரை 12 சீட்

    இதுவரை 12 சீட்

    இதுவரை திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுவை உள்பட 10 சீட்டுகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், ஈஸ்வரன் கொங்கு நாடு தேசிய மக்கள் கழகம் கட்சிக்கும் தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 12 சீட் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     வியப்பு

    வியப்பு

    பாரிவேந்தர் கமல் போலவே, வாக்காளர்களுக்குப் பணம் தர மாட்டேன் என்று கூறி வருபவர். இந்த நிலையில் திடீரென அவர் திமுகவுடன் கை கோர்த்துள்ளது வியப்பை ஏற்டுத்தியுள்ளது.

     பெரம்பலூரா மனசா

    பெரம்பலூரா மனசா

    பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்படுமா அல்லது ஆதரவை மட்டும் வாங்கிக் கொண்டு மறைந்த தலைவர் கருணாநிதி பாணியில் தனது மனதில் இடம் தருவாரா மு.க.ஸ்டாலின் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Sources say that IJK party will join DMK alliance today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X