சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபாவுக்கு பல கட்ட தேர்தலா?.. சென்னை வந்த சுஷ்மா சுவராஜ் சூசக தகவல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபாவுக்கு பல கட்ட தேர்தலா?சென்னையில் சுஷ்மா சுவராஜ் பேட்டி

    சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரலில் தொடங்கும் என எதிர்ப்பார்ப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

    சென்னை தியாகராயநகரில் உள்ள தட்சிண பாரத் இந்தி பிரசார சபாவில், 82வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அவர், இந்தி பிரச்சார சபா தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    Parliamentary elections first phase will begin in April says Sushma Swaraj

    அப்போது பேசிய அவர், இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளது என கூறினார்.

    இந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு முன்பு இருந்ததாகவும் தற்போது பல்வேறு துறைகளில் அந்த நிலை மாறி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்தியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாம்.. சொல்வது சுஷ்மா.. அதுவும் சென்னையில் இந்தியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாம்.. சொல்வது சுஷ்மா.. அதுவும் சென்னையில்

    முன்னதாக, சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரலில் தொடங்கும் என எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

    English summary
    External Affairs Minister Sushma Swaraj said that the parliamentary election will begin in early April.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X