சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட பாவமே.. சென்னையில் நாய்களுக்கு பரவும் பார்வோ வைரஸ்.. அறிகுறிகள் என்ன?.. சிகிச்சை முறைகள் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் ஒன்றரை ஆன்டுகளாக பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் முதல் முறையாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள் ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

இதில் இரண்டு சிங்கங்கள் இறந்தும் போயின. இந்த நிலையில் சென்னையில் நாய்களை தாக்கும் பார்வோவைரஸ் வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக இந்த பார்வோவைரஸ் நாய் குட்டிகளை எளிதாக தாக்கும். பார்வோவைரஸ் பெரும்பாலும் வயிறு மற்றும் சிறுகுடல்களை பாதிக்கிறது. செல்களை அழிக்கிறது.

அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் என்ன?

நோயெதிர்ப்பு மண்டலத்தின் திசுக்கள், இதய தசையையும் பார்வோவைரஸ் தாக்க கூடும். பார்வோவைரசில் இருந்து நாய்களை காப்பதற்காக தடுப்பூசிகள் உள்ளன. நாய்களில் மயக்கம், சோர்வு மற்றும் / அல்லது செயலற்ற தன்மை.பலவீனம், கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையே பார்வோவைரஸ் அறிகுறியாகும்.

நாய்களுக்கு தடுப்பூசி

நாய்களுக்கு தடுப்பூசி

பார்வோவைரசால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடவில்லை அல்லது முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் நாய்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். இந்த நிலையில் சென்னை பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையம் சார்பில் பார்வோவைரசில் இருந்து தடுப்பதற்காக சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. பெசன்ட் மெமோரியல் விலங்கு மருந்தகத்தில் தற்போது 250 நாய்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றன.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இவை 7 கால்நடை மருத்துவர்களால் பராமரிக்கப்படுகின்றன. குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, கட்டிகளை அகற்றுதல் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பார்வோவைரஸ் குறித்து பெசன்ட் மெமோரியல் விலங்குகள் சிகிச்சை மையத்தின் மூத்த கால்நடை மருத்துவரான ஆர் சூரஜ் மோகன் கூறியதாவது:-

பார்வோவைரஸ்

பார்வோவைரஸ்

மழையும் பார்வோவைரசை பரப்பும். ஒரு நாய்க்குட்டி பாதிக்கப்படும்போது, ​​அந்த தொடர்பின் மூலம் மற்ற நாய்களுக்கும் பரவுகிறது. மழை அந்த பகுதியில் உள்ள அனைத்து நாய்க்குட்டிகளுக்கும் பரவ உதவியதாக நாங்கள் உணர்கிறோம். ஜூன் மாத இறுதியில் ஒரு அதிகரிப்பை நாங்கள் கவனித்தோம், ஒவ்வொரு நாளும் சுமார் 25 பாதிப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
    சிகிச்சை இலவசம்

    சிகிச்சை இலவசம்

    தடுப்பூசிகளால் குணப்படுத்த முடியாத நாய்களுக்கு தேவையான திரவங்கள் மற்றும் மருந்துகளையும் பெசன்ட் மெமோரியல் விலங்குகள் சிகிச்சை மையத்தில் வழங்கப்டுகிறது. நாய்க்குட்டிக்கு 45 நாட்கள் இருக்கும் போது தடுப்பூசியின் முதல் டோஸ்கொடுக்கப்பட வேண்டும். இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பெசன்ட் மெமோரியல் விலங்குகள் சிகிச்சை மையத்தில் பெரும்பாலான சிகிச்சை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Parvo virus is spreading to dogs in Chennai. Thus street dogs are vaccinated. When a puppy becomes infected, the virus spreads to other dogs through that contact
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X