சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதபோதகர்கள் செய்ற காரியமா இது.. சின்ன குழந்தைகள் என்றும் பாராமல்.. 2 பேருக்கு வலை!

2 மதபோதகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: சின்ன குழந்தைகள் என்றும் பாராமல், அசிங்க அசிங்கமாக அவர்களிடம் பேசியுள்ளனர் 2 மதபோதகர்கள்.. இது சம்பந்தமான அவர்களது செல்போன் உரையாடல்களே சாட்சியாக இன்று நிற்கின்றன!

சென்னை அயனாவரத்தில் ஸ்கிரிப்ச்சர் யூனியன் அண்டு சில்ரன் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சில் ஆப் இந்தியா என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பு செயல்பட்டு வருகிறது... இதில், சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் மதபோதகர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

Pastors in trouble after talking to girls in obscene words

இந்த மிஷனின் ஆங்கில மொழி பிரிவு செயலாளராக வேலூரில் பணியாற்றியவர்தான் சாமுவேல் ஜெய்சுந்தர்.. கடந்த ஆகஸ்ட் மாதம், அவரிடம் படித்து வந்த 19 வயது இளம்பெண் திடீரென ஒரு புகாரை சாமுவேல் மீது தந்தார்.. தன்னுடைய ஃபேஸ்புக் மெசஞ்சரில் சாமுவேல் ஆபாசமாக சேட் செய்ததாக அந்த பெண் கூறியிருந்தார்.

இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. உடனடியாக விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட், ஜேனட் எபனேசர் ஆகியோரும் இதே போல பள்ளி சிறுமிகளிடம் ஆபாசமாக உரையாடி வந்தது தெரியவந்தது.. எல்லாமே அசிங்க அசிங்கமான மெசேஜ்களாக இருந்தன.. அவைகள் அனைத்துமே சோஷியல் மீடியாவில் ஸ்கிரீன் ஷாட்டுகளாக வெளியாகி மேலும் பரபரப்பை தந்தன..

இதையடுதது 3 பேரும் சஸ்பெண்ட் செய்து மிஷன் நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டதுடன், சென்னை கமிஷனர் ஆபீசுக்கும் ஒரு புகாரை அனுப்பியது. அதன்பேரில் விசாரணை நடத்தும்படி அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிடவும், அதன்படியே விசாரணையும் நடந்தது.

இறுதியில், சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட் ஆகியோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இப்போதைக்கு சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட் 2 பேரும் தலைமறைவாக இருக்கிறார்களாம்.. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

English summary
Pastors in trouble after talking to girls in obscene words
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X