சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சாஹி நியமனம்.. ஜனாதிபதி உத்தரவு

கால்ஷீட் பிரச்சினையால் அஜித்தின் வலிமை பட வாய்ப்பை பாலிவுட் நடிகை பரிநீதி சோப்ரா நிராகரித்துவிட்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 13க்குள் பதவியேற்றுக் கொள்ளுமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரமானி வேண்டுகோள் விடுத்தார்.

Patna High Courts Chief Justice Amreshwar Pratap Sahi appointed as the next Chief Justice of the Madras High Court

ஆனால் கொலிஜியம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதன் காரணமாக தஹில் ரமானி தலைமை நீதிபதியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

2 வீடு.. 50 லட்சம் ரொக்கம்.. தந்தால்தான் தாலி.. மிரட்டிய மாப்பிள்ளை.. போலீஸுக்கு வந்த பெண் டாக்டர்

இதனை ஏற்று கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமரேஸ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். அத்துடன், சாஹியை வரும் நவம்பர் 13ம் தேதிக்குள் பதவி ஏற்று கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி ஏகே மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சய் கரோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
The pretty actress is busy acting in Hindi films back to back has denied the opportunity to act with Ajith in Valimai because of call-sheet problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X