சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ இதுதான் பாமக 2.0? பாமக தலைவராகிறார் அன்புமணி! உற்சாகத்தில் பாட்டாளிகள்! ஜிகே மணிக்கு இந்த பதவியா?

Google Oneindia Tamil News

சென்னை : நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் தலைவராக இருக்கும் ஜி கே மணி, மூத்த ஆலோசகர் தலைமை நிர்வாகி உள்ளிட்ட பதவிகளுக்கு மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வன்னியர் சங்கமாக இருந்த அமைப்பை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவாக்கியவர். ராமதாஸ். மருத்துவர் பதவியை உதறிவிட்டு முழுநேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அந்த இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளில் ஒன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு. வன்னியர் சமூகம் மட்டுமல்லாது பிற சமூக மக்களுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவு இட ஒதுக்கீட்டைப் பெற இந்த போராட்டம் உதவியது.

47 மணி நேர போராட்டம்! கல்குவாரி விபத்தில் சிக்கிய 4வது நபர் சடலமாக மீட்பு! மேலும் இருவரின் கதி என்ன? 47 மணி நேர போராட்டம்! கல்குவாரி விபத்தில் சிக்கிய 4வது நபர் சடலமாக மீட்பு! மேலும் இருவரின் கதி என்ன?

பாமக

பாமக

வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டிருந்தாலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு கட்சியின் கட்டமைப்பு வருத்தப்படவில்லை. திராவிட கட்சிகளுடனும் அல்லது தேசிய கட்சிகளுடனும் கூட்டணி யில் பங்கேற்று தேர்தலை சந்தித்தால் மட்டுமே சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்றத்திற்கு செல்ல இயலும் நிலையில் தான் பாமக இருக்கிறது. ஆனாலும் அந்தக் கட்சியின் செல்வாக்கு காரணமாக தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள எப்போதுமே தமிழக அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருவது உண்மைதான். கடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களின் போது அதிமுகவும் திமுகவும் பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டினார்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தாலும் அதிமுக ஆட்சியை இழந்தது. அதே நேரத்தில் படு தோல்வியில் இருந்து மீள்வதற்கு பாமகவின் வடமாவட்ட வாக்குகள் காரணம் என எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஓப்பனாக பேசும் அளவுக்கு பாமகவின் செல்வாக்கு இருந்தது. இதற்குப் பிரதிபலனாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அன்புமணி ராமதாசுக்கு வழங்கி அழகு பார்த்தது அதிமுக. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

குறிப்பாக தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி விழுப்புரம் மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் பார்வையை திருப்பி இருக்கும் அன்புமணி கடந்த இரு மாதங்களுக்கு மேலாக தொண்டர்கள் நிர்வாகிகளை சந்தித்து கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கிவருகிறார். அவர் சொல்லிய இரண்டு முக்கியமான விஷயங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு மற்றும் பாமக 2.0. கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல மேடைகளில் மூத்த தலைவர்கள் இருக்கும்போதே அன்புமணி ராமதாஸ் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் சீர்திருத்தம்

கட்சியில் சீர்திருத்தம்

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தான் செல்லும் போதும் அங்கு எவ்வளவு பெரிய மூத்த நிர்வாகிகள் இருந்தாலும் இங்கு இளைஞர்கள் அதிக அளவில் கூடியிருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவே மூத்த நிர்வாகிகள் இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என வெளிப்படையாகவே பேசுகிறார். இதன் காரணமாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாநில துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியை ஒழித்துவிட்டு மாவட்டங்களை பல பகுதிகளாகப் பிரித்து அவர்கள் மாவட்ட தலைவர்கள் ஆக்கப்பட்டனர்.

பாமக தலைவர்

பாமக தலைவர்

இந்தச் சூழலில்தான் தற்போது பாமகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் மாவட்ட அளவிலான தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காரணம் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் ராமதாஸ் அல்லது ஜிகே மணியின் ஒப்புதலுக்காக அன்புமணி ராமதாஸ் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் சுணக்கம் ஏற்படுவதாகவும் தானே தலைவராக இருந்தால் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் குழப்பம் ஏற்படாது என அன்புமணி ராமதாஸ் கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜிகே மணிக்கு புதிய பதவி

ஜிகே மணிக்கு புதிய பதவி

அதே நேரத்தில் கட்சி தொடங்கியதிலிருந்து நீண்ட காலமாக பயணிப்பவர் காலமாக அக்கட்சியின் தலைவராக இருக்கும் ஜிகே மணிக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பது சற்று சங்கடமாக இருந்தாலும் கட்சியின் எதிர்கால நலன் கருதி அதனை செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அவருக்கு கட்சியின் மூத்த ஆலோசகர்,. தலைமை நிலைய தலைவர் போன்று ஒரு கௌரவம் மிக்க பதவியை வழங்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி ஆயினும் இன்னும் ஓரிரு வாரங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உருவெடுப்பது உறுதி என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.

English summary
It has been reported that Anbumani Ramadoss, the youth wing leader of the pattali makkal katchi, has been elected as the leader of the party at the forthcoming general body meeting of the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X