சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த மாதிரி ஊதிய பிடித்தம் ஊழியர்களுக்கு நல்லது.. எப்படி சேமிக்கலாம்? நம்ம வாசகர் சொல்வதை பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பெருந் தொற்று நோய் உலகம் முழுக்க ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாது, பொருளாதாரம் சார்ந்த விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதில் முக்கியமானது, நிறுவனங்கள் சம்பள பிடித்தம் செய்வது, அல்லது கட்டாய விடுப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகள்தான். பெருமளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனங்களே, இந்த தொற்றுநோய் காலத்தை சமாளிக்க முடியாமல் சம்பளப் பிடித்தம் செய்கிறது என்றால், சாமானியர்கள், அதாவது, அங்கு பணிபுரிவோர் நிலைமையை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Pay-cut the real pandemic for job goers- Explainer

எவ்வாறு சம்பளப் பிடித்தம் செய்யப்படுகிறது. எந்த வகை இதில் கையாளப்படுகிறது என்பது பற்றியும், இதை சமாளிப்பதற்கு சேமிப்பு முக்கியம் என்பது பற்றியும் நமது வாசகர் சசிகலா என்பவர் முன்வைத்துள்ள இந்த யோசனையை நீங்களும் பாருங்களேன்.

சம்பளப் பிடித்தம் என்ற சொல் அல்லது பிங்க் ஸ்லிப் என்ற சொல் ஐடி ஊழியர்களை தவிர்த்து பிற நிறுவனங்களில் அதிகம் கேள்விப்பட்டிராத ஒன்று. ஆனால் கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக இப்போது பல்வேறு நிறுவனங்களிலும் இந்த வார்த்தை அடிபடுகிறது.

வெளிநாடுகளில் இது சகஜமாக இருந்த போதிலும், இந்தியாவில் வலிமையாக உள்ள தொழிலாளர் நல சட்டங்கள், தொழிலாளர் சங்கங்கள் போன்றவற்றால் ஊதியப் பிடித்தம் அல்லது காரணமின்றி பணியாளரை உடனடியாக வேலையில் இருந்து அனுப்புவது போன்றவை இல்லாமலிருந்தது. கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக இந்த வார்த்தை இந்தியாவில் தற்போது சகஜமாகி உள்ளது.

Pay-cut the real pandemic for job goers- Explainer

வரதட்சணை வழக்கு- மாஜி துணைவேந்தர் சேதுபதிக்கான சிறை தண்டனை ஓராண்டாக குறைப்புவரதட்சணை வழக்கு- மாஜி துணைவேந்தர் சேதுபதிக்கான சிறை தண்டனை ஓராண்டாக குறைப்பு

இருப்பினும், நீண்ட காலமாக செயல்படக் கூடிய நல்ல நிறுவனங்களே, 6 மாத பிரச்சினையை கூட சமாளிக்க முடியாமல், ஊழியர்களிடம், சம்பளத்தை பிடித்தம் செய்வது என்பது, அந்த நிறுவனத்தின் மோசமான நிதி ஆளுமையைக் காட்டுவதாகத்தான் கருத வேண்டும்.

இரண்டு வகையில் சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது. ஒன்று, பிளாட். இன்னொன்று விகிதாச்சார அடிப்படை. விகிதாச்சார அடிப்படையில் வருமான வரி பிடித்தம் எப்படி செய்யப்படுகிறதோ அது போன்ற வகையில் செய்யப்படுகிறது விகிதாச்சார சம்பளப் பிடித்தம்.

நிறுவனம் நிர்ணயித்து ஒரு குறிப்பிட்ட அளவை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வது பிளாட் பிடித்தம். இது தொடர்பான ஒரு மாதிரி அட்டவணையை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

Pay-cut the real pandemic for job goers- Explainer

விகிதாச்சார அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்யப்பட்டால், அப்போது தொழிலாளர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. அந்த தொகையை கொண்டு சேமிப்பை வலுப்படுத்திக் கொள்ளலாம். விகிதாச்சார அடிப்படையில் சம்பளத்தை பிடிக்கும்போது, வருமானவரிக்கு செல்லக்கூடிய பணம் குறையும் என்பது தொழிலாளி பார்வையில் வரவேற்கத்தக்க விஷயம்.

எனவே மேலே குறிப்பிட்டுள்ள மாதிரிஅட்டவணையை பின்பற்றி, எந்த மாதிரியான சம்பள குறைப்பு, எந்த மாதிரியான மாத சம்பளத்தை உங்களுக்கு கிடைக்க செய்யும் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

English summary
Oneindia reader Sasikala's opinion, on pandemic pay cuts, one should be aware of the modes & means of the salary cut and the amount to be reduced from their take home salary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X