சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 12250.50 கோடி உடனே வழங்க வேண்டும் - மோடிக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏப்ரல் 1 முதல் தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. தமிழகத்திற்கு 12250.50 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது.

Pay Rs 12250.50 crore GST amount immediately - Chief Minister Palanisamy letter to Modi

கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.

இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும்.

ஸ்டாலின் சொல்லசொல்ல அச்சு பிசகாமல் அப்படியே செய்கிறார் எடப்பாடி.. உதயநிதி போட்ட டுவிட் ஸ்டாலின் சொல்லசொல்ல அச்சு பிசகாமல் அப்படியே செய்கிறார் எடப்பாடி.. உதயநிதி போட்ட டுவிட்

சென்ற ஜூலை மாத இறுதியில் 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,65,302 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இதில், தமிழகத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.12,305 கோடி வழங்கப்பட்டது.

Recommended Video

    தமிழ் கடவுள் முருகனின் வாகனம் மயிலுக்கு உணவு கொடுக்கும் மோடி

    சென்ற நிதியாண்டுக்கான இழப்பீட்டுத் தொகை தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டுக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy has written a letter to Prime Minister Narendra Modi urging the central government to immediately release the GST arrears to Tamil Nadu, which has suffered huge revenue losses during the Corona period.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X