• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஸ்டாலின் ஆட்சியில் இன்று.. எம்ஜிஆர் ஆட்சியில் அன்று.. பாஜகவின் வேண்டாத பழக்கம்".. பழ.நெடுமாறன் நச்

Google Oneindia Tamil News

சென்னை: ஜனநாயக மரபுகளுக்கு எதிராகவும், மாநில ஆட்சிகளை கண்காணிப்பதற்கும் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்குக்கு எதிராக அனைவரும் இணைந்து கண்டன குரல் எழுப்ப வேண்டும்" என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த வாரம், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது.

 Exclusive: வீட்டை தலையில் தூக்கிப் போக முடியுமா... எல்லோரும் வரட்டும் சார்.. கே.ஜெயக்குமார் எம்.பி. Exclusive: வீட்டை தலையில் தூக்கிப் போக முடியுமா... எல்லோரும் வரட்டும் சார்.. கே.ஜெயக்குமார் எம்.பி.

யார் இந்த ஆர்என் ரவி?

யார் இந்த ஆர்என் ரவி?

பீகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்டவர் ஆர்என் ரவி... இவரது முழு பெயர் ரவீந்திர நாராயண் ரவி என்பதாகும்... இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி..!

 வன்முறை

வன்முறை

பூர்வீகம் பீகார் என்றாலும், 1976ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.. கேரளாவிலும் மற்ற பிற மாநிலங்களிலும் போலீசில் உயர் பொறுப்புகளை வகித்தவர்.. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும், மத்திய உளவு பிரிவான ஐபி-யில் திறம்பட பணியாற்றியவர். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு கொண்டவர்.

 நியமனம்

நியமனம்

2012ல் ஓய்வு பெற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்தில் இணை உளவு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு, பிறகு, 2018-ல் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டவர்.. இதற்கு பிறகுதான், அதாவது அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார் ரவி.

 ஸ்டாலின்

ஸ்டாலின்


2 வருடங்கள் நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றிய நிலையில், இப்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.. இந்த நியமனத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருந்தார்.. நாளை மறுநாள் ஆர்.என்.ரவி ஆளுநராக பதவியேற்று கொள்ளவுள்ளார்.. எனினும் புதிய ஆளுநரின் நியமனம் குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும், விவாதங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன.

 நெருக்கடி?

நெருக்கடி?

அதற்கு காரணம், திமுக ஆட்சி தற்போதுதான் அமைந்துள்ளது.. எனவே மாநில அரசுடன் அவர் இணக்கமாக செல்வாரா, நெருக்கடியை ஏற்படுத்துவாரா? பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவாரா? என்பன போன்ற சந்தேகங்களும் எழுந்தபடியே உள்ளன.. நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "புதிதாக பதவி ஏற்க இருக்கும் ஆளுநர் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்த தவறை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்" என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

 பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்


இந்நிலையில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "தமிழகத்தின் புதிய ஆளுநராக உளவுத் துறை அதிகாரி ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வித்துறையினர், முன்னாள் நீதியரசர்கள் போன்ற அரசியல் சார்பற்றவர்களே மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுவார்கள் என அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சரான அம்பேத்கர் வாக்குறுதி அளித்தார்.

 ஆளுநர்கள்

ஆளுநர்கள்

1967-க்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தபோது, அங்கெல்லாம் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்கு வளரத் தொடங்கியது. மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியின்போது அங்கு ஆளுநராக உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியின்போது இந்திய உள்துறையின் செயலாளராக இருந்த சுந்தர்லால் குரானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 பாஜக

பாஜக

மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது பின்பற்றிய இந்த வேண்டாத பழக்கத்தை பாஜக அரசும் பின்பற்றுகிறது. ஜனநாயக மரபுகளுக்கு எதிராகவும், மாநில ஆட்சிகளைக் கண்காணிப்பதற்கும் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்குக்கு எதிராக அனைவரும் இணைந்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Pazha Nedumaran condemned the appointment of TN Governor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X