சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிருஸ்துவ பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக நாளை கொண்டாடி மகிழ உள்ளனர் கிருஸ்துவர்கள்.

இந்நிலையில் அவர்களது ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தியாகத்தின் மறுவுருவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Peace and happiness fullfill in the world ..Chief minister said greet to Easter Ceremony

பகைவர்களுக்கும் நன்மை செய்யுங்கள், அப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள் என்றுரைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சித்ரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக அனுசரித்து, அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் வாழும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

இரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு இரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு

இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister Edappadi palanicami, said Easter greetings to Christian community
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X