சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த புகார்னாலும் இரண்டே நிமிஷம் தாங்க நடவடிக்கை எடுக்க.. சென்னை காவல் ஆணையர் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தலைநகர் சென்னையை பொறுத்த வரை மக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் தேர்தல் தொடர்பாக எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தேர்தல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது, 2 நிமிடங்களில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. சிறு பிரச்சினை என்றாலும் உடனே தீர்க்கப்படுகிறது. உடனுக்குடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடுகிறார்கள்.

Peace is going on in Chennai election .. No problem .. Chennai Commissioner

பஸ் வருமா? வராதா? 20 மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்.. கோயம்பேட்டில் வெடித்த போராட்டம்! பஸ் வருமா? வராதா? 20 மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்.. கோயம்பேட்டில் வெடித்த போராட்டம்!

வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இதுவரை எவ்வித அச்பாவிதத்திற்கும் இடமளிக்கப்படவில்லை என்றார். பிரச்சனைக்குரிய சமூக விரோதிகள் மீது ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தற்போது சென்னையில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் என்றார் ஏ.கே.விஸ்வநாதன்.

English summary
Chennai Metropolitan Police Commissioner AK Vishwanathan has said that arrangements have been made for people to vote in the capital city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X