• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"மர்மம்".. குண்டை தூக்கி போட்ட வெங்கடேசன்.. "சத்தமே கேக்கலயே.. ஏன்?".. வெலவெலத்து போன டெல்லி

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை எம்பி வெங்கடேசன் ஒரு முக்கியமான பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்.. எம்பிக்களுக்கு தரப்படும் மாஸ்க்கில் மர்மம் இருக்கிறதாம்.. அதை அணிந்து கொண்டு கோஷம் போட்டால் வெளியே சத்தமே கேட்பதில்லை என்று ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் என்எஸ்ஓ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது... இந்த நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை தயாரித்துள்ளது..

இதன்மூலம் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரின் பர்சனல் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவைகள் உளவு பார்க்கப்பட்டதாகவும் ஒரு புகார், வாஷிங்டன் டைம்ஸ், தி வயர் உள்ளிட்ட முன்னணி மீடியாக்களில் வெளியானது.. இதை பார்த்து உலக தலைவர்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்.

பெகாசஸ் உளவு.. மூத்த பத்திரிக்கையாளர்கள் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்பெகாசஸ் உளவு.. மூத்த பத்திரிக்கையாளர்கள் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

 மத்திய அமைச்சர்கள்

மத்திய அமைச்சர்கள்

இந்தியாவிலும் ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர், உள்ளிட்ட 2 மத்திய அமைச்சர்கள், திரிணமூல்காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட சீனியர் அரசியல்வாதிகளின் செல்போன்களும், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் செல்போன்களும் மத்திய அரசால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.. அவர்களின் போன்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாகவும் இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியானது.

 அமளி

அமளி

இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கொந்தளித்து போயின. இந்த முறை நாடாளுமன்றம் கூடியதுமே இந்த விவகாரத்தை கிளப்ப முடிவு செய்தனர்.. அதன்படியே நாடாளுமன்றம் கூடியதில் இருந்தே ஒரே அமளிதான்.. இந்தியாவில் பல பிரச்சனைகள் சூழ்ந்து கிடந்தாலும், அனைத்து கட்சியினரும் ஒன்றுகூடி சேர்த்து அவையில் எழுப்பிய பிரச்சனை பெகாஸஸ் விவகாரம் குறித்துதான்.

விளக்கம்

விளக்கம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் கடுமையான விவாதத்தையும் ஏற்படுத்தியது.. இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஏற்கனவே விளக்கம் தந்திருந்தும், எந்த கட்சிகளும் அதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கூட தயாராக இல்லை..

 பெயர்கள்

பெயர்கள்

"தி வயர்" உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பெகாஸஸ் மென்பொருள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்து கொண்டே இருப்பதால், இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிகிற மாதிரியும் தெரியவில்லை.. தினம்தினம் அமளியில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டு கொண்டே இருந்தனர்..

 நாற்காலி

நாற்காலி

காகிதங்களையும், கோப்புகளையும் கிழித்து அவைத் தலைவரின் நாற்காலி மீதும், அமைச்சர்களை நோக்கியும் வீசவும் செய்தனர்.. இந்த பெகாசஸ் உளவு குறித்து தனி சிறப்பு விசாரணை சுப்ரீம்கோர்ட்டின் கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கையும் வைத்து வருகின்றன.

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின... மக்களைவையில் கேள்வி நேரத்துக்கு பின்பு பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது... அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 அமளி

அமளி

இதுபோலவே மாநிலங்களவையிலும் இன்று காலை தொடங்கியது முதலேயே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பின... நண்பகல் 12.00 வரை அவை ஒத்திவைக்கப்பட்டது... பின்னர் அவை கூடியதும் மறுபடியும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மறுபடியும் பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும் அமளி நீடித்ததால் அவை ஆகஸ்ட் 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 மாஸ்க்

மாஸ்க்

இந்த சூழலில் மதுரை எம்பி சு.வெங்கசேடன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், மக்களவை அலுவலகம் எம்பி களுக்கு நாடாளுமன்ற படம் அச்சிடப்பட்ட N-95 மாஸ்க் கொடுத்துள்ளது. அதனை அணிந்து கோஷம் போட்டால் சத்தம் வெளியில் கேட்பதில்லை. அவை கொரோனவை மட்டுமல்ல பெகாஸஸ் விசாரணைக்கான குரலை தடுப்பதற்கும் முயற்சிக்கிறது. எனவே, நாங்கள் சர்ஜிக்கல் மாஸ்கைத்தான் அணிகிறோம்'' என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 பகீர்

பகீர்

ஏற்கனவே பாஜக மேலிடம் பெகாசஸ் விவகாரத்தினால் ஆட்டம் கண்டிருக்கிறது.. மற்றொரு புறம் ஒருநாள்கூட அவையை நடத்த விடாத அளவுக்கு எதிர்க்கட்சிகள், முழக்கமிட்டு வருகின்றனர்... இந்நிலையில், வெங்கடேசன் வைத்துள்ள இந்த புகாரானது, அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளது.. அந்த மாஸ்க்கில் அப்படி என்னதான் மர்மமோ?

English summary
Pegasus: MP Su Venkatesan tweeted about special mask given by Lok sabha for MPs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X