சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

EXCLUSIVE: கையில காசில்லை.. ஏன் இப்படி வசூல் பண்றீங்க.. ரோடு டேக்ஸ் இனிமே வாங்காதீங்க.. மக்கள் கோபம்

சுங்க கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: "இப்ப இந்த டோல்கேட் கட்டண உயர்வு தேவையா? அப்படின்னா, ரோடு டேக்ஸ் இனிமேல் வாங்காதீங்க.. இதெல்லாம் சொன்னால் நம்மை தேசவிரோதி, தீவிரவாதி, ஆன்டி இன்டியன்னு சொல்லிடுவாங்க" என்று சுங்க சாவடி கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களும் லாரி டிரைவர்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தபோதே பொதுமக்கள் அதிர்ந்தனர்.. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 21 சுங்கசாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சுங்கக் கட்டண உயர்வுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர்ந்து கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

Gold Rate in Chennai: தங்கத்தின் விலை மூக்குத்தி சைஸுக்கு குறைவு.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? Gold Rate in Chennai: தங்கத்தின் விலை மூக்குத்தி சைஸுக்கு குறைவு.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

 சுங்க கட்டணம்

சுங்க கட்டணம்

இது லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், இந்த உயர்வு குறித்து லாரி டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக அவர்களிடமே நாம் கேட்டோம்.. அவர்கள் நம்மிடம் சொன்ன கருத்துக்களின் தொகுப்புதான் இது:

 கருத்துக்கள்

கருத்துக்கள்

"இப்பதான் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்தாங்க.. அந்த அறிவிப்பு வந்த உடனேயே இப்படி ஒரு அறிவிப்பு எதிர்பார்க்கவில்லை.. ஏற்கனவே தொற்று பாதித்து சிரமத்தில் உள்ள நிலையில், இது மேலும் ஒரு சுமைதான்... நாங்க பார்த்தவரைக்கும், சுங்கம் வசூலிக்கும் நிறுவனங்கள், சரியான விதிமுறைகளின் செயல்படவில்லை.. சர்வீஸ் சாலைகளும் சரியாக இல்லை.. பல இடங்களில் ஒப்புக்கு உள்ளன.. இந்த 5 மாசமாக கையில் காசு உள்ள நிலையில், இன்னும் இது எங்களுக்கு நஷ்டம்தான்.. இப்படி கட்டண உயர்வு வாங்கிற அளவுக்கு சாலைகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா?

 ஹைவேஸ்

ஹைவேஸ்

எத்தனை ஹைவேஸ்-ல் லைட் இல்லாமல் இருக்கு தெரியுமா? இதனால் ஏற்படும் விபத்துக்களுக்கு யார் பொறுப்பு? இப்பதான் இ பாஸ் ரத்தாகி இருக்கு.. எங்களை போன்ற சரக்கு வாகன டிரைவர்களுக்கு சரியான சவாரிகள் கிடைக்கவில்லை.. சரக்கு கிடைப்பதே பெரிய கஷ்டமா இருக்கு.. டீசல் உயர்வை சமாளிப்போமா, இவங்களுக்கு டோல்கேட்டில் பணத்தை தருவோமா?

பரனூர்

பரனூர்

5 வருஷம் ஆகியும் முடிந்தும் பரனூர் சுங்கச்சாவடி எதுக்கு இன்னும் செயல்பட்டுட்டு இருக்கு? இந்த டோல்கேட்டில் இன்னும் எவ்வளவு எத்தனை வருஷத்துக்கு வசூல் செய்வாங்க? இதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்களுக்கு தெரிவிப்பாங்களா? இந்த கட்டண உயர்வு என்பது ஒரு பகல் கொள்ளை.. எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அரசு ரத்து செய்யணும்.. அப்படி இல்லேன்னா ரோடு டேக்ஸ் இனி வாங்காதீங்க.. இதெல்லாம் சொன்னால் நம்மை தேசவிரோதி, தீவிரவாதி, ஆன்டி இன்டியன்னு சொல்லிடுவாங்க" என்று குமுறினர்.

அதிருப்தி

அதிருப்தி

அதேபோல, இந்த கட்டண உயர்வு அந்த அளவுக்கு ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் சிலர் கருத்து கூறுகிறார்கள்.. அப்பாவி ஏழைகளிடம் காசு வாங்கலையே.. நடந்து போகிறவங்க கிட்டயா வாங்குறாங்க.. காரில் போகிறவங்க கிட்ட தானே வசூலிக்கிறாங்க.. லாரி டிரைவர்கள் சரக்கு டிரைவர்கள் என்றாலும், இந்த கட்டண உயர்வு எல்லாம் அவங்களுக்கு பெரிய விஷயமே இல்லையே' என்ற காரணத்தையும் முன் வைக்கிறார்கள்.

 கனிமொழி

கனிமொழி

இருந்தாலும், அரசை பொறுத்தவரை, தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்த கட்டண உயர்வு என்பது சுமையாகவே பார்க்கப்படுகிறது.. கனிமொழி எம்பி சொன்னதைதான் இங்கு நாமும் சொல்ல வேண்டி உள்ளது.. "விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம்... என்றுதான் மக்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ ஆட்சியாளர்கள்?"

English summary
People are angry of Toll fee hike in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X