சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோ கள்ள காதல்.. நோ சீக்ரெட் உறவு.. நோ கிரைம்.. கப்சிப் மோடில் மக்கள்.. எல்லாத்துக்கும் காரணம் கொரோனா

கொரோனா பீதி காரணமாக குற்றங்கள் நடப்பது தற்போது குறைந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: நோ கள்ள காதல்... நோ கள்ள உறவு.. நோ முறை தவறிய செக்ஸ்... மொத்த இழுக்கான காரியமும் இந்த கொரோனாவால் காணாமல் போய் கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    கொரோனாவால் குறைந்த குற்றசெயல்கள்

    கொரோனா வைரஸ் உயிர் பயத்தை அதிகமாகவே காட்டி வருகிறது.. யாரிடமிருந்து எப்போது, எப்படி, தொற்று பரவும் என்பது இதுவரை முடிவாகாததால், மக்கள் உலகளவில் அதிகமாக பயந்து உள்ளனர்.

    வேகவேகமாக பரவி மனித இனத்தையே அழித்துக் கொண்டு இருந்தாலும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு ஒருசில ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    மனைவி

    மனைவி

    வைரஸ் பரவ ஆரம்பித்தது இருந்து உலகம் முழுவதும் பாலியல் தொழில் சுத்தமாக படுத்து விட்டதாம். அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனராம். மனைவியை தவிர வேறு யாரிடமும் உடலுறவு கொள்ள அனைத்து ஆண்களும் பயப்படுகிறார்கள்... பெண்களும் கள்ள காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் வீட்டில் அடக்கமாக இருக்கிறார்கள்.

    ஆணுறைகள்

    ஆணுறைகள்

    சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு இருந்தாலும் தானாகவே அனைவருக்கும் வந்துள்ள பீதிதான் இதற்கு காரணமாக உள்ளது. ஆணுறைகள் அதிகமாக விற்பனை, தட்டுப்பாடு என்று செய்திகள் ஏராளமாக வந்தாலும் மனைவியை தவிர வேறு யாரையும் நெருங்க ஆண்கள் பயப்படுவதாக சொல்லப்படுகிறது.

    குற்றங்கள்

    குற்றங்கள்

    எத்தனையோ கடுமையான தண்டனைகள் இயற்றப்பட்டு சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு இருந்தாலும் காலங் காலமாக, குற்றங்களை செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அடங்கிவிட்டனர்... உலக அளவிலேயே இந்த குற்றங்கள் குறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. கள்ள உறவு மட்டும் என்றில்லை, அதேபோல் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற எந்த குற்றமும் பெரும்பாலும் நடைபெறவில்லை.

    கொள்ளைகள்

    கொள்ளைகள்

    யார் வீட்டில் யார் யார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அறிகுறிகள், தொற்றுடன் இருக்கிறார்கள் என்பது தெரியாததால், திருட்டு, கொள்ளைகள் நடக்காமல் உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வேலை நின்றுவிட்டது... முடக்கம் அறிவிக்கும் முன்னரே பாலியல் தொழிலாளர்கள் தாமாகவே முன் வந்து தொழிலை நிறுத்தி விட்டனர்.. அதேபோல கஸ்டமர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    பாலியல் தொழில்

    பாலியல் தொழில்

    இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்... இவர்களது தொழில் இப்போது நின்றுவிட்டதால், வருமானமும் இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தில் எல்லோருமே வீட்டிற்குள் அடங்கி உள்ளதால், தங்களையும் அறியாமல் ஒழுக்கத்தின் பாதையில் பலர் பயணித்து வருகிறார்கள்.. கொரோனா வைரஸ் எத்தனையோ தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மக்களிடம் ஒரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது!

    English summary
    People are practicing individual discipline due to coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X