சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியை விட பலசாலி யாரு தெரியுமா.. ரஜினி கருத்துக்கு கமல் பலே பதில்!

Google Oneindia Tamil News

சென்னை: மோடியை விட தமிழக மக்களே பலசாலி என்று கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கஜா புயல் பாதித்த இடங்களில் ஆய்வு நடத்திய கமல்ஹாசன் டைம்ஸ் நவ் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் கஜா புயல் பாதித்த இடங்களில் மறுவாழ்வு பணிகள் நடைபெற சற்று காலம் ஆகும் என்றாலும் கூட உடனடி மீட்பு பணிகள் என்பது சற்று அச்சுறுத்தலை கொடுக்கிறது. மறுசீரமைப்பு பணிகள் என்பது ஒரு இரவில் நடந்து விட முடியாது. இது 4 அல்லது 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

முழு வீச்சில்

முழு வீச்சில்

ஆனால் மீட்பு பணிகள் மந்த கதியில் நடைபெறுகிறது. ஹெலிகாப்டரில் தாழ பறந்த சென்று மீட்பு பணிகளை பார்வையிடுவது என்பது கை கொடுக்காது. முதல்வர் வெகு சில கிராமங்களை மட்டுமே பார்வையிட்டுள்ளார். எந்த கிராமங்களையும் அமைச்சர்கள் முழு வீச்சில் பார்க்கவில்லை.

பறந்து கொண்டு தீர்வு

பறந்து கொண்டு தீர்வு

இது அரசியல் கருத்து அல்ல. பொதுமக்களின் புகார் ஆகும். இதிலிருந்து நான் எந்தவித அரசியல் ஆதாயத்தையும் தேட முற்படவில்லை. முதல்வர் மேம்பாலங்களை திறந்தாலும் சரி, மேலே பறந்து கொண்டு பார்த்தாலும் சரி இதுபோன்ற பெரிய பிரச்சினைகளுக்கு ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு தீர்வு காண்பது இயலாத ஒன்று.

முடியாவிட்டால்

முடியாவிட்டால்

முதல்வரே பாதித்த இடங்களுக்கு நேரில் செல்ல வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும். அவரால் செல்ல முடியாவிட்டால் அவரது அதிகாரிகளையாவது அனுப்பி வையுங்கள். தமிழக அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்ககளில் 12-க்கு 20 அடியாக உள்ளன. இங்கு 150 முத்ல 200 பேர் வரை தங்க வைக்கப்படுகின்றனர்.

இழப்பீடு

இழப்பீடு

இந்த அறைகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. நீர் நிலைகள் எல்லாம் இறந்த விலங்குகளால் மாசடைந்து வருகின்றன. ஒரு கிராமத்தில் மீனவர்கள் 400 படகுகளை இழந்துள்ளனர். இதை பார்க்கும் போது மினி சுனாமி போல் உள்ளது. ஒவ்வொரு படகும் ரூ 10 லட்சம் மதிப்புள்ளது. ஆனால் தமிழக அரசோ வெறும் 85 ஆயிரம் இழப்பீடு வழங்குகிறது. இது எந்த வகையான கண்துடைப்பு.

கவலை

கவலை

எதிர்க்கட்கிகள் சார்பில் நான் எந்த கருத்தையும் பேசவில்லை. மாநிலத்தின் துயரமான சம்பவத்தை அறிந்த ஒரு தமிழனாகவே பேசுகிறேன். அதிமுக செயல்படாத ஒன்றாகிவிட்டது. பதவியை பிடித்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர். நாங்கள் யாரை பார்த்தும் பயப்படவில்லை. கவலைப்படவில்லை. எங்கள் கவலையெல்லாம் தமிழகம் மட்டுமே என்று தெரிவித்தார்.

பலசாலி

பலசாலி

பத்து பேர் சேர்ந்து ஒருவனை எதிர்த்தால் அந்த ஒருவனே பலசாலி என்று எதிர்கட்சிகளை விட மோடி பலசாலியாக ரஜினி சூசகமாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் டைம்ஸ் ந்வ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக மட்டுமல்ல. எந்த கட்சியானாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்களே பலசாலி என்று கூறியுள்ளார்.

English summary
Kamal Haasan says that people are stronger than Modi. He gives indirect reply to Rajinikanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X