சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. தங்கம் விற்கிற விலைக்கு பேசாம.. ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கிடலாம் போலயே!

Google Oneindia Tamil News

சென்னை: தங்க நகைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பெண்களின் திருமணத்திற்காக நகைகளுக்கு பதிலாக வீட்டை வாங்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

22 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டியது. இதே 24 கேரட் தங்கத்தின் விலை 44 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இன்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5112 ஆகும்.

அரை பவுனில் திருமாங்கல்யம் வாங்க வேண்டும் என்றால் கூட 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை செலவிட வேண்டிய சூழல் உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்தை எப்படி நடத்தி வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அல்லும் பகலும் தொடர்ந்து உழைப்போம்... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முதல்வர் பஞ்ச் அல்லும் பகலும் தொடர்ந்து உழைப்போம்... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முதல்வர் பஞ்ச்

சம்பளக் குறைப்பு

சம்பளக் குறைப்பு

கொரோனாவால் வேலை இழந்து சம்பளக் குறைப்பு, ஆட் குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏராளமானோர் சந்தித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை பெற்றவர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை பெற்றவர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

10 பவுன்

10 பவுன்

அதாவது ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் என வைத்துக் கொண்டால், முதல் பெண்ணிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் 10 பவுன் நகை போட்டு திருமணம் செய்திருப்பர். அப்போது சவரன் 15 ஆயிரம் என்றால் கூட 1.50 லட்சத்தில் 10 சவரனை வாங்கியிருப்பர். ஆனால் இரண்டாவது பெண்ணுக்கும் அதே 10 பவுன் போட வேண்டும் என்றால், தற்போதைய விலை 40 ஆயிரம் என்றால் 4 லட்சம் வரை செலவாகும். ஒரு நகைக்கே இத்தனை செலவென்றால் மற்ற செலவுகளை எப்படி செய்ய முடியும்.

10 பவுன் நகையின் விலை

10 பவுன் நகையின் விலை

அது போல் ஒரு வீட்டில் இரு ஆண் பிள்ளைகள் என வைத்துக் கொண்டால் முதல் பிள்ளையை திருமணம் செய்த பெண் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 10 சவரன் நகையுடன் வந்திருப்பார். இதற்காக அவரது பெற்றோர் ஒன்றரை முதல் 2 லட்சம் வரை செலவு செய்திருக்கக் கூடும். ஆனால் அதே இரண்டாவது பெண்ணை திருமணம் செய்யும் பெண்ணும் அதே 10 பவுன் போட்டால்தான் அந்த பெண்ணுக்கு கவுரம் என்பார்கள். அந்த நேரத்தில் 1 லட்சத்தின் விலை எங்கிருக்கிறது? 4 லட்சத்தின் விலை எங்கே இருக்கிறது?

குறைந்தபட்சம்

குறைந்தபட்சம்

இது இப்படியாக குழப்பங்கள் நிலவி வருகிறது. இன்னோரு புறம் அந்த பெண்ணின் திருமணத்திற்கு எப்படி நகைகளை வாங்குவது என சிந்தித்து வருகிறார்கள். தற்போது டிவிகளில் நிறைய விளம்பரங்கள் வருகின்றன. அதில் குறைந்தபட்சத்தில் அபார்ட்மென்ட்களை வாங்கலாம் என வருகின்றன. சென்னை புறநகர் பகுதியில் குறைந்தபட்சம் ஒரு பிஎச்கே அபார்ட்மென்டின் விலை ரூ 12 லட்சத்தில் இருந்து 17 லட்சம் வரை விற்கப்படுகிறது.

பில்டர்கள்

பில்டர்கள்

இதற்கு 90 சதவீதம் வீட்டு கடனையும் அந்தந்த பில்டர்களே ஏற்பாடு செய்கிறார்கள். 10 சதவீத பணம் மட்டும் கட்டினால் போதும் அதாவது ரூ 1.20 லட்சம் முதல் ரூ 1.7 லட்சம் வரை கட்டினாலே போதுமானது. மற்ற பணத்தை தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம். தங்கத்தை போல வேகமாக வளர்ச்சி அடையும் தொழில் வீடு விற்பனை இன்று 12 லட்சத்திற்கு வாங்கும் வீட்டின் விலை இன்னும் 5 ஆண்டுகளில் நல்ல விலைக்கு போகும்.

தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் மீதான முதலீடும் சிறந்ததுதான், ஆனால் அதை நாம் மொத்தமாக வாங்க வேண்டி வரும். இதே அபார்ட்மென்ட் என்றால் தவணைகளில் பணம் செலுத்தலாம். முதலில் அபார்ட்மென்ட் பிறகு பணம், ஆனால் தங்கத்தை பொருத்தமட்டில் முதலில் பணம் கட்டிய பிறகே நகை கிடைக்கும். எனவே குழந்தைகளுக்கு நகையை சேர்த்து வைப்பதற்கு பதிலாக தாம் சர்வீஸில் இருக்கும் போதே வீட்டு மனையாகவோ அல்லது வீடாகவோ வாங்கி விட்டால் அதை குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

English summary
People are thinking of buying an apartment or flat instead of gold in less investment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X