சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைகள் ஓகே.. அப்படியே அரசு அலுவலகங்களையும் 24 மணிநேரம் திறந்து வச்சா வேலைவாய்ப்பு பெருகும்ல!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு- வீடியோ

    சென்னை: தமிழக அரசு 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பதிற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு எழுந்துள்ளது.

    தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதன்மூலம் வணிகர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசின் முடிவுக்கு சமூக வலைதளங்களிலும் வரவேற்பு எழுந்துள்ளது.

    இதன்மூலம் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆட்கள் சேர்க்கை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் குறையும் என்றும், கடைகளை போலவே அரசு அலுவலகங்களையும் 24 மணி நேரம் திறந்து வைத்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி வெடித்தது- ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்! அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி வெடித்தது- ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்!

    கடன்களை அடைத்துவிடலாம்

    24 மணி நேரம் டாஸ்மாக் திறந்து வைத்தால் அதை நம்பி வாழும் பார்கள், சுண்டல் விற்கும் பாட்டிமா, சைடிஷ் கடைகள் என பலர் பலன் அடைவார்கள். தமிழக அரசின் கடன்களை அடைத்துவிடலாம்.

    இவர்களுக்குதான் பொருந்தும்

    24 மணிநேரம் பணி செய்ய அனுமதி அளிக்கும் அரசாணையை படிச்சாச்சு உணவகம், தியேட்டர், கேளிக்கை பகுதிகள், வர்த்தக நிறுவனம், தொழிற்சாலைகளுக்கு இது பொருந்தாதாம் குடோன், வேர்ஹவுஸ், சர்வீஸ் சென்டர், சிறு வியாபார கடைகள் போன்றவைகளுக்குத்தான் பொருந்துமாம்.

    எந்நேரமும் எல்லாமும் கிடைக்கும்

    24 மணிநேரமும் கடைகள், வணிகங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. இதன் மூலம் வேலை வாய்ப்பு,
    வருமான பெருக்கமின்றி, எந்நேரமும் மக்களுக்கு எல்லாமும் கிடைக்க வழிவகை கிடைக்கும்.

    இரவில் பலரின் பசி தாகம் தீரும்

    அதைவிட இரவில் என்னைப் போன்றவர்களின் பசி தாகம் தீர்க்க ஊர்தோறும் கடைகள் திறந்திருக்குமே

    இந்த வழியும் ஆச்சரியம்தான்

    24 மணி நேரமும் கடைகள்
    திறந்திருக்கலாம்...! அரசு அறிவிப்பு : உடனடியாக வேலை வாய்ப்பை (3 shifts) பெருக்க இப்படியும் ஒரு வழி இருப்பது ஆச்சரியம்தான்..!போதுமான அளவு போக்குவரத்து,பாதுகாப்பு மற்றும் மின்சார வசதி பெருகுவதைப் பொறுத்து திட்டம் வெற்றி பெறலாம்...!!
    வாழ்க பாரதம்...!!!

    முன்மாதிரியாக திகழப்போகிறது

    தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழப்போகிறது, 24 மணிநேரமும் கடைகள், வணிக வளாகம்,திரையரங்குகள் இயங்கவுள்ளதாக தகவல், இது உண்மையாகும் பட்சத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றி.

    வேலைக்கு ஆள்? பீகாரியா?

    24 மணி நேரம் கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு
    சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது
    மின்சார தேவை பூர்த்தி செய்யும் அளவுக்கு உபரியாக உள்ளது
    அரசுக்கு வரி வருவாய் உயர போகுது
    போக்குவரத்து தேவைக்கு உள் கட்டமைப்பும் உருவாகும்.
    சொல்லாமல் புரிகிறது, வேலைக்கு ஆள்? பிஹாரி தானே?

    சாத்துங்கன்னு சொல்ல முடியாது

    தமிழ் நாட்டில் இனி 24 மணி நேரம் அனைத்து கடைகள் மற்றும் அனைத்தும் செயல்படலாம்.
    இனிமேல் காவல் துறையினர் கடைய சாத்துங்கன்னு சொல்ல முடியாது

    இதான் குடியரசு

    தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
    //ஒத்த கடைய அடைக்க சொன்னா மொத்த கடையை திறக்கிற பாத்தியா இதான் குடியரசு.

    அதுவும் வர்த்தக நிறுவனம் தானே

    கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்னு அரசாங்கம் சொல்லிடுச்சு. அப்போ Wine Shop 24 மணி நேரமும் திறந்து இருக்குமான்னு கேட்டா எல்லாம் ஒரு மாறி பாக்குறாங்க.........அதுவும் வர்த்தக நிறுவனம் தானே

    அடுத்த நகர்வு

    தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
    // வாழ்த்துக்கள். அடுத்த நகர்வு..

    சிசிடிவி கேமரா மாட்டுங்க

    24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசாணை
    மறக்காம #சிசிடிவி கேமரா மாட்டுங்க

    24 மணிநேரமும் அரசு அலுவலகங்கள்

    தமிழகத்தில் 24 மணி‌ நேரமும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்து இருக்க அனுமதிக்கும் .
    .அரசாணையை வெளியிடப்பட்டது
    தமிழக அரசு
    இதைப்போல் 24 மணி நேரமும் அனைத்து அரசு அலுவலகங்களும் (தாலுகா,வட்டார போக்குவரத்து, வங்கிகள், மாவட்ட நிர்வாகமும்) செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

    விடிய விடிய புடவை..

    தமிழகத்தில் 24மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும்.
    # விடிய விடிய புடவை செலக்ட் பண்ணும் சம்பவம்லாம் அரங்கேறும்.

    வேலைவாய்ப்பு பெருகும்

    தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறக்க அனுமதி தரும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு #TN #Shops
    அப்படியே , அரசு அலுவலகங்கள் , 24 மணிநேரமும் இயங்க செய்தால் , இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் , மக்களுக்கான சிரமங்கள் குறையும்.

    English summary
    People are welcoming the GO of Shops can open for 24/7. On Social media netizens thanking govt of Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X