சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேஷன் கடைகளில் இனிமேல்.. 30 நாட்களும் பொருட்கள் வினியோகம்.. அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ரேஷன் கடையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற பொருட்களின் தரம் குறித்தும், எத்தனை ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

 ஆத்தூரை புரட்டிப் போட்ட ஐ.பெரியசாமி.. 1.34 லட்ச வாக்குகள் வித்தியாசம் - எதிர் கேம்ப் டெபாசிட் காலி ஆத்தூரை புரட்டிப் போட்ட ஐ.பெரியசாமி.. 1.34 லட்ச வாக்குகள் வித்தியாசம் - எதிர் கேம்ப் டெபாசிட் காலி

ரேஷன் கடையில் ஆய்வு

ரேஷன் கடையில் ஆய்வு

ரேஷன் கடையில் உள்ள ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் மெஷினையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த திடீர் ஆய்வால் ரேஷன் கடை பரபரப்பாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஐ.பெரியசாமி.

தரம் பற்றி சோதனை

தரம் பற்றி சோதனை

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறேன். தற்போதைய திடீர் ஆய்வுவும் அப்படித்தான் நடைபெற்றது.

30 நாட்களும் பொருள்

30 நாட்களும் பொருள்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். இதன் மூலம், 30 நாட்களும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் செய்ய வாய்ப்பு உருவாகும்.

நிவாரண நிதி

நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதி அனைத்துக் கடைகளிலும் 100 சதவிகிதம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் எனது தலைமையில் ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.

English summary
Cooperative Minister I. Periyasamy has said that the vacant of ration shop staff in Tamil Nadu will be filled soon and goods will be distributed in the ration shops 30 days a month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X