சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கு பழைய முறைப்படிதான் இ-பாஸ்.. அரசு விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோர் முன்பு போலவே இ பாஸ் பெற வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மாவட்டங்களிடையே பயணிக்கும் மக்கள் அனைவருக்கும் விண்ணப்பித்ததும் இ பாஸ் வழங்கப்படும் என்றும், இந்த தளர்வு 17ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவித்தது. இந்த நிலையில், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கான விதிமுறையையும் விளக்கியுள்ளது அரசு.

People coming from abroad and other states to Tamilnadu have to get epass

அரசு செய்திக்குறிப்பில் கூறியுள்ள தகவல் இதுதான்:

பொதுமக்கள், முக்கிய பணிகளுக்கு, தடையின்றி தமிழ்நாடு முழுக்க பயணிக்க, (மாவட்டங்களுக்கு இடையே) 17ஆம் தேதி முதல் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை விபரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடம் விண்ணப்பித்தால் இ பாஸ் எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க இன்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர தற்போதுள்ள இ பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா.. 100க்கும் அதிகமான வேக்சின்களை உருவாக்க முடியும்.. அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை!கொரோனா.. 100க்கும் அதிகமான வேக்சின்களை உருவாக்க முடியும்.. அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை!

மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தமிழகத்தில் வசிக்ககூடியவர்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு அதே மாதிரி பாஸ் நடைமுறை தொடரும். இதன் மூலம், உரிய காரணம் இன்றி எளிதாக யாரும் தமிழகத்திற்குள் வரமுடியாதபடி பார்த்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
People who want to come to TamilNadu from other states and other countries have to to get epass which will operate like earlier system, says Tamil Nadu government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X