சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று அட்சய திருதியை:காலையிலேயே கல்லாவைத் திறந்து வைத்த நகைக் கடைகள்.. குவிந்த மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று அக்ஷய திரிதியை என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சித்திரை அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாவது வளர்பிறை நாள் அக்ஷய திரிதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

People deploying in jewel shops to as today is Akshaya Tritiya

இதனை முன்னிட்டு கடந்த சில ஆண்டுகளாக அக்ஷய திரிதியை நாளில் மக்கள் தங்க நகைகளோ அல்லது வெள்ளி நகைகளையோ தங்களால் முடிந்த அளவுக்கு வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று அக்ஷய திரியை என்பதால் காலை 6 மணிக்குள்ளாகவே சென்னையில் பெரும்பாலான நகைக்கடைகள் திறப்பட்டுவிட்டன.

அட்சய திருதியை 2019: ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேரர் மகா யாகம்- தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும்அட்சய திருதியை 2019: ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேரர் மகா யாகம்- தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும்

இதனால் மக்களும் காலை முதலே நகைகளை வாங்க நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர். அக்ஷய திரிதியை மக்களிடம் நாளுக்கு நாள் பிரசித்தி பெற்று வருவதால் ஆண்டுதோறும் அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த அக்ஷய திரிதியை நாளில் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் நகை விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
People deploying in jewel shops to as today is Akshaya Tritiya. jewel shops also has opened earlier in the morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X