சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மீனு மீனேய்".. காசிமேட்டில் அதிகாலையிலேயே குவிந்த கூட்டம்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி!!

Google Oneindia Tamil News

சென்னை: நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக இன்று அதிகாலைில் அளவுக்கு அதிகமான கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    காசிமேட்டில் அதிகாலையிலேயே குவிந்த கூட்டம்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி!

    தமிழகத்தில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையகங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

    ஏனைய காய்கறி, இறைச்சிக் கடைக், பெட்ரோல் பங்க், மளிகை கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும். இதனால் சனிக்கிழமைகளில் மேற்கண்ட கடைகளில் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதும்.

    Unlock 3.0: ஜூலை 31க்கு பிறகு எந்த மாதிரி ஊரடங்கு.. முதல்வர்களுடன் 27ம் தேதி மோடி முக்கிய ஆலோசனை Unlock 3.0: ஜூலை 31க்கு பிறகு எந்த மாதிரி ஊரடங்கு.. முதல்வர்களுடன் 27ம் தேதி மோடி முக்கிய ஆலோசனை

    மீன்

    மீன்

    அது போல் இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். மீன், சிக்கன், மட்டன் ஆகியவற்றை வாங்கி இன்றே ஃபிரீசரில் வைப்பதுவிட்டு நாளை சமைப்பர். இந்த நிலையில் மட்டனின் விலை அதிக விலைக்கு விற்பனையாவதால் நடுத்தர மக்களின் சாய்ஸ் கோழி, மீனாக உள்ளது. கோழியையும் சிலர் சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் அவர்களின் சாய்ஸ் மீன்.

    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் காலை 3 முதல் 8 மணி வரை வியாபாரம் செய்ய மீன்வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்துவிட்டனர். இதனால் பொதுமக்கள் கூட்டம் அந்த பகுதியில் அலைமோதியது. மேலும் சமூக இடைவெளி என்ற வார்த்தையை மறந்துவிட்டனர்.

    கொரோனா

    கொரோனா

    கூட்டத்தோடு கூட்டமாக கொரோனாவுக்கு முன் எப்படி இருந்தோமோ அதே போல் காசிமேட்டில் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் படாதபாடுபட்டனர். மேலும் வடசென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த கூட்டம் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

    மீன் விற்பனை

    மீன் விற்பனை

    ஒலிப்பெருக்கிகள் மூலம் மக்களைக் கலைந்து செல்லும்படியும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க சொல்லியும் தொண்டை தண்ணீர் வற்ற போலீஸார் அறிவுறுத்தியும் அதை மக்கள் காதில் போட்டு கொண்ட பாடில்லை. மாறாக மீன் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். மேலும் மீன் விற்பனை களைகட்டியது. ஞாயிற்றுக்கிழமை இதுபோல் மீன் சந்தை, இறைச்சிக் கடைகளில் மக்கள் அலைமோதுவர் என்பதால்தான் முழு ஊரடங்கு போடப்பட்டது. ஆனால் இவர்கள் சனிக்கிழமையே கூட்டமாக கூடி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை நீர்த்து போகச் செய்கின்றனர்.

    English summary
    People gathered as mass in Kasimedu fishing spot ahead of Full lockdown on Sunday. They are buying fish without maintaining social distancing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X