சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை ஆள பாமகவிற்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

அனைத்து தரப்பினருக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமகவுக்கு தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பு அளிக்க

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். அதற்காக தமிழக மக்கள் ஒருமுறை பாமகவிற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் டாக்டர் ராமதாஸ் ஆட்சிக்கு வருவது பற்றி பேசியுள்ளதால் கூட்டணியில் இருந்து விலகி கடந்த சட்டசபை தேர்தலைப் போல தனித்து போட்டியிட முடிவு செய்து விட்டாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய, 'சுக்கா..., மிளகா..., சமூகநீதி?' என்ற புத்தக வெளியிட்டு விழா அவரது முன்னிலையில் அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இணையதளம் வாயிலாக நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய டாக்டர் ராமதாஸ், அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சமவாய்ப்பு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும். அனைத்து தரப்பினருக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி.. சீனா லேபிலிருந்து கொரோனா வைரஸ் வெளியானதாக கூறிய டாக்டர் டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட் அதிர்ச்சி.. சீனா லேபிலிருந்து கொரோனா வைரஸ் வெளியானதாக கூறிய டாக்டர் டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட்

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நான், டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதுகுறித்து இதுவரை அரசாங்கம் நம்மை அழைத்து பேசவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி நாம் கேட்டுக்கொண்டே இருப்பது?.

பாமகவிற்கு வாய்ப்பு கொடுங்க

பாமகவிற்கு வாய்ப்பு கொடுங்க

தமிழ்நாட்டில் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். அதற்காக பா.ம.க.வுக்கு தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்பான பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை தொகுதி அளவிலும், கிராம அளவிலும், வீடுவீடாகவும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அன்புமணி முதல்வர் வேட்பாளர்

அன்புமணி முதல்வர் வேட்பாளர்

கடந்த சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து போட்டியிட்டது. அதிமுக திமுக உடன் ஒருபோதும் இனி கூட்டணி கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது பாஜக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது பாமக. இதனடிப்படையில்தான் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி பதவியை விட்டுக்கொடுத்தது அதிமுக.

கூட்டணியில் விரிசல்

கூட்டணியில் விரிசல்

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவின் மனநிலையில் மாற்றம் தென்பட்டு வருகிறது. எந்த கூட்டணியில் யார் யார் என்று இன்னமும் எந்த கட்சியினரும் உறுதி செய்யவில்லை இந்த நிலையில் பாமக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தனித்து களமிறங்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளார் பிரேமலதா. தற்போது பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

English summary
Dr. Ramdas said that if people change their minds, our condition will improve. If PMK comes to power, education, society, All demands including economy can be fulfilled. For that the people of Tamil Nadu once.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X