சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் சொன்னால் போதும்.. உடனே செய்துவிடுகிறார்.. ஒரே அறிவிப்பில் அசர வைத்த முதல்வர் இபிஎஸ்.. கெத்து!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் கோரிக்கை வைத்தால் போதும்.. உடனே அதற்கு செவி மடுத்து அந்த கோரிக்கையை நிறைவேற்றுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிலும் இன்று காலை முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று, பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    'ஸ்கூல் மட்டும் திறக்க வேணாம் தலைவா..' முதல்வர் பழனிச்சாமியை பார்த்து கத்திய மாணவர்கள் - வீடியோ

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் அலை பரவல் தொடங்கி உள்ள நிலையில்.. தமிழகத்தில் தினசரி கொரோனா கேஸ்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கி லாக்டவுன் போடப்பட்ட நாளில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல அதிரடி முடிவுகளை துணிச்சலாக எடுத்து இருக்கிறார்.

    மக்கள் கோரிக்கை

    மக்கள் கோரிக்கை

    அதிலும் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து.. முறையான ஆலோசனைக்கு முதல்வர் முடிவுகளை எடுக்கிறார். இ பாஸ் ரத்து செய்தது, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது, பேருந்துகளை இயங்க அனுமதித்தது என்று மக்களின் கோரிக்கைக்கு ஏற்றபடி முதல்வர் பழனிச்சாமி பல அதிரடி முடிவுகளை எடுத்து இருக்கிறார்.

    மாற்றம்

    மாற்றம்

    அதிலும் சில முடிவுகளை மக்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிந்த உடன் அதை உடனே மாற்றவும் முதல்வர் ஒப்புக்கொண்டார். முடிவை எடுத்துவிட்டேன்.. மாற்ற மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து முடிவைகளை மாற்றவும் முதல்வர் தயங்குவது இல்லை. அந்த வகையில் தற்போது துணிச்சலாக பள்ளிகள் திறப்பை முதல்வர் பழனிசாமி தள்ளி வைத்துள்ளார்.

    மாற்றம்

    மாற்றம்

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று முதல்வர் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பிற்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    கூட்டம்

    கூட்டம்

    கொரோனா சமயத்தில் பள்ளிகள் திறப்பது ஆபத்து, முதல்வர் இதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் துணிச்சலாக பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைத்துள்ளார்.

    செய்தி குறிப்பு

    செய்தி குறிப்பு

    இது தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி.. பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால், 9.11.2020 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது.

    கருத்து கேட்பு

    கருத்து கேட்பு

    சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்கவேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர் .இந்த இருவேறு கருத்துக்களையும் ஆராய்ந்தோம்.

    வல்லுனர்கள்

    வல்லுனர்கள்

    வல்லுனர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது., என்று குறிப்பிட்டுள்ளார்.. மக்கள் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலன் கருதி முதல்வர் பிறப்பித்த இந்த உத்தரவு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    People give a huge thumbs up to TN Govt decision on postponding the opening of Schools .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X