சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கு திரும்பினாலும் அரசியல்.. கலக்கும் பா.ரஞ்சித்தின் வானம் கலைத்திருவிழா.. பெரும் வரவேற்பு!

சென்னையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்பட்டு வரும் 3 நாள் ‘வானம் கலைத்திருவிழா’ பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்பட்டு வரும் 3 நாள் 'வானம் கலைத்திருவிழா' பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அட்டகத்தி தொடங்கி காலா வரை அரசியல் சார்ந்த ஹிட் படங்களை கொடுத்து இந்தியா முழுக்க வைரலானவர் இயக்குனர் பா.ரஞ்சித். தமிழ் சூழலில் பெரிய கனவாக இருக்கும் மியூசிக் பேண்ட், இன்டிபென்டட் இசை ஆல்பம் ஆகியவைகளுக்கு தற்போது பா.ரஞ்சித் உயிர் கொடுத்து வருகிறார்.

கடந்த வருடம் இவரின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக உருவாக்கப்பட்ட 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' கலைக்குழு தற்போது தமிழகத்தின் முன்னணி கலைக்குழுவாக மாறியுள்ளது. இந்த நிலையில் அடுத்த முன்னெடுப்பாக வானம் கலைத்திருவிழாவை பா.ரஞ்சித் நடத்தி வருகிறார்.

 ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ கலைக்குழு

‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ கலைக்குழு

இந்த ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' கலைக்குழு சென்ற வருடம் நடத்திய இசை நிகழ்ச்சி பெரிய வைரலானது. பீப் பாடல் தொடங்கி இவர்களின் இடஒதுக்கீட்டிற்கான ''கோட்டா'' பாடல் வரை எல்லாமே பெரிய ஹிட் அடித்தது. இந்த பாடல்கள் பெரிய விவாதத்தை உண்டாக்கியது. இந்த குழுவில் உள்ள தென்மா உள்ளிட்ட இசைக்கலைஞர் பெரிய வைரல் ஆனார்கள்.

அடுத்த இன்னிங்ஸ்

அடுத்த இன்னிங்ஸ்

இந்த நிலையில் தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக 3 நாள் ‘வானம் கலைத்திருவிழா' சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த முறை இசைநிகழ்ச்சி மட்டும் இல்லாமல் பல பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மைலாப்பூரில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளை மாலையோடு முடிகிறது.

பெரிய வரவேற்பு

பெரிய வரவேற்பு

நேற்று இந்த நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள் என்று குடும்ப சகிதமாக பலர் இந்த விழாவை வந்து பார்வையிட்டனர். அரசியல் பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள் பலர் இதை பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இந்த விழாவில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

இந்த மூன்று நாள் விழாவில் இசை நிகழ்ச்சி மட்டுமில்லாமல், ஆர்ட் கேலரி, புத்தக வெளியீடு, தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புற நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சி, பறையிசை, நாடகங்கள், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனை பற்றிய விவாதங்கள் , ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழுவின் முதல் இன்டிபென்டட் இசை ஆல்பமான ‘மகிழ்ச்சி' வெளியீடு என்று நிறைய முக்கிய நிகழ்வுகள் நடக்கிறது.

அரசியல் வாசம்

அரசியல் வாசம்

மைலாப்பூரில் தனியார் பள்ளியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எங்கும் திரும்பினாலும் அரசியல், அரசியல், அரசியல் மட்டும்தான். கலை நிகழ்ச்சி, பாடல், சினிமா,புத்தகம் என்று அனைத்திலும் அரசியல் வாசம் அதிகமாவே இருந்தது. முக்கியமாக சில முக்கிய அரசியல் பிரச்சனையை நெற்றியில் அடித்தது போல சொல்லிய ஆர்ட் கேலரிக்கு சிறப்பு சல்யூட்!

English summary
People gives massive support to Director Pa.Ranjith's Vaanam Art Festival in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X